Published:Updated:

உலக நன்மைக்காக பெருவேள்விப் பெருவிழா... சென்னைக் காளிகாம்பாள் கோயிலில் பிரத்யங்கிரா மகாசாந்தி ஹோமம்!

பிரத்யங்கிரா மகாசாந்தி யாகம்!
பிரத்யங்கிரா மகாசாந்தி யாகம்!

இந்த யாகத்தில் ஶ்ரீகாளிகாம்பாளுடன் தசமஹாவித்யா தேவிகள், தசமஹா மாத்ரு தேவிகள், தசமஹா அஸ்திர சக்திகள், 16 வகை தேவதாகுழுமங்கள், அகோரவீரபத்திரருடன் அஷ்ட பைரவர்கள், ருத்திரர்கள், மகாசாஸ்தா, அஷ்ட வசுக்கள், யோகினிகள் ஆகியோர் ஆராதனை செய்யப்படுவர்.

அன்னை காமாட்சி காளிகாம்பாளாகக் காட்சி கொடுக்கும் திருத்தலம் வடசென்னையில் அமைந்திருக்கும் காளிகாம்பாள் திருக்கோயில். இங்கு ஈசன் கமடேஸ்வரர் என்ற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். இங்கு அன்னை, ஶ்ரீசக்ரத்தின் முக்கோணத்தில் புவனேஸ்வரியாக சக்ரராஜ சிம்ஹாசனத்தில் அமர்ந்து காட்சிகொடுக்கும் ராஜராஜேஸ்வரியாக ராஜமாதங்கியாக சாந்த சொரூபியாய் காமாட்சியாக உக்கிர ரூபம் கொண்டு அஷ்டபுஜ வீரபத்திரருடன் பத்ரகாளியாய் அருள்பாலிக்கிறாள். சத்ரபதி சிவாஜி இங்குவந்து காளிகாம்பாளை தரிசனம் செய்ததாகவும் சொல்லப்படும் இந்தத் தலம் அருட்சக்தி நிறைந்த கற்பகத் தருவோடும் காமதேனுவோடும் விளங்கி அன்னை லலிதா பரமேஸ்வரி ஆட்சி செய்யும் ஶ்ரீபுரம் சிந்தாமணி கிரஹமாகவே விளங்குகிறது.

சென்னை காளிகாம்பாள்
சென்னை காளிகாம்பாள்

கார்த்திகை மாதத்தில், காளிக்கு ப்ரீதி ஏற்படவும், உலகில் அமைதி ஏற்படவும் வருடந்தோறும் இந்த ஆலயத்தில், தச மஹா தேவியருடன் பிரத்யங்கிரா தேவியைப் போற்றும் வகையில், ஒன்பது யாக குண்டங்கள் அமைத்து, 10 நாள்கள், 18 வேளைகளில், 10 லட்சம் ஜபம் செய்து, 10 லட்சம் ஜபத்துக்கு ஒரு பங்கு என்ற அளவில் ஒரு லட்சம் ஆஹுதிகள் சமர்ப்பிக்கப்படும். பெருஞ்சாந்தி முறையில் `மஹா சாந்திக மாத்ரு யக்ஞம்' என்ற பெயரில் இந்த யாகம் நடைபெற்றுவருகிறது.

மகாசாந்திக ஹோமம்

அன்னை காளி சரத்காலத்தில்தான் அவதரித்ததாக ஐதிகம். எனவே, சரத் ருது எனப்படும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களின் ஐப்பசி, கார்த்திகை மாதங்களின் அஷ்டமி மற்றும் அமாவாசை திதி அன்று ஆராதனை செய்தால் அன்னை மனம் கனிந்து அருள்பாலிப்பாள். எனவே அதையொட்டி ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தலத்தில் அன்னையினை ஆராதிக்கும்படி மாத்ருசக்தி சாந்தி மகாயாகம் நடத்தப்படுவது வழக்கம். பத்துநாள்கள் நடைபெறும் இந்த யாகத்தில் ஶ்ரீகாளிகாம்பாளுடன் தசமஹாவித்யா தேவிகள், தசமஹா மாத்ரு தேவிகள், தசமஹா அஸ்திர சக்திகள், 16 வகை தேவதாகுழுமங்கள், அகோரவீரபத்திரருடன் அஷ்ட பைரவர்கள், ருத்திரர்கள், மகாசாஸ்தா, அஷ்ட வசுக்கள், யோகினிகள் ஆகியோர் ஆராதனை செய்யப்படுவர்.

தச மஹா தேவியருடன் பிரத்யங்கிரா தேவியைப் போற்றும் வகையில், ஒன்பது யாக குண்டங்கள் அமைத்து, 10 நாள்கள், 18 வேளைகளில், 10 லட்சம் ஜபம் செய்து, 10 லட்சம் ஜபத்துக்கு ஒரு பங்கு என்ற அளவில் ஒரு லட்சம் ஆஹுதிகள் சமர்ப்பிக்கப்பட்டு ஆராதனைகள் செய்யப்படும். அன்னையின் சகல ரூபங்களையும் சாந்திப்படுத்தும் நோக்கில் செய்யப்படும் இந்த யாகத்தை அழகு தமிழில் அருள்தரு பெருந்தேவி அன்னையர் பெருஞ்சாந்திப் பெருவேள்வி என்று அழைக்கிறார்கள்.

இந்த யாகம் டிசம்பர் 2 ம் தேதி தொடங்கி டிசம்பர் 13 வரை நடக்க இருக்கிறது. இந்த யாகத்தில் தினமும் காலை ஶ்ரீமகாபத்ரகாளி நவாவரண பூஜையும் மாலை ஶ்ரீ ப்ரத்யங்கரா நவாவரண பூஜையும் மாத்ரு தேவதைகளுக்கு மாத்ருயக்ஞமும் பைரவாதிகக்கு பலிவிதானமும் நடைபெறும்.

யாகபலன்கள்

தினமும் ஆலய உற்சவமூர்த்தி ஶ்ரீ வீரபத்ர ஸ்வாமிக்கும் பத்ரகாளி அன்னைக்கும் விசேஷ ஹோமத்துடன் கூடிய நவ கலச அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மேலும் தினமும் இரவு 8 மணிக்கு காளிக்கு ஒருவகை மண்டல தேவதா பூஜையும் ப்ரமஹச்சாரி, சுவாஸினி, கன்னிகை வடுகர் ஒருவர் வீதம் பூஜைகள் மற்றும் மங்கள நீரான்ஜனமும் நடைபெறும்.

அபிஷேகம்
அபிஷேகம்

நிகழ்வின் 12-ம் நாள் டிசம்பர் 13 அன்றைய தின ஹோமங்கள் முடிந்து மஹாயாக மஹாபூர்ணாகுதி நடைபெறும். அன்று மாலையில் சிறப்புப் படையலும் பலிதானங்களும் நடைபெற விழா முடிவுக்கு வரும்.இந்தப் பெருவேள்வி, உலக அமைதி மற்றும் செழிப்புக்காகவும் உயிர்களின் பாவங்கள் நீங்குமாறும் மக்களைப் பீடித்திருக்கும் தரித்திரங்கள், நோய்கள், தொல்லைகள் நீங்கவும் வெற்றி, ஞானம், சுகம், போகம், செல்வம் முதலிய பாக்கியங்கள் கிடைக்கவும் நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொண்டு தரிசனம் செய்யும் பக்தர்களின் மன பயங்கள் நீங்கும். எதிரிகளால் உண்டாகும் தொல்லைகள் விலகும். தொடங்கும் செயல்களில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் ஸித்திக்கும் என்கின்றனர் சிவாசார்யர்கள்.

அடுத்த கட்டுரைக்கு