Published:Updated:

"அர்ச்சகர்களைப் பணி நிரந்தரம் செய்யப் பரிந்துரைகளை அனுப்புங்கள்!" - ஆணையர்களுக்கு அமைச்சர் உத்தரவு

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

அர்ச்சகர்கள் பணி நியமனம் குறித்து விவாதிக்க நேற்று (17/8/2021) அறநிலையத்துறையின் சார்பில் 47 திருக்கோயில்களின் இணை ஆணையர்கள், அர்ச்சகர்கள், பட்டாசார்யர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி அடிப்படையில் திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பட்டாச்சார்யர்களை நிரந்தப் பணி நியமனம் செய்வதற்கான பரிந்துரைகளை அனுப்புமாறு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று நடைபெற்ற திருக்கோயில்களின் இணை ஆணையர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.

அர்ச்சகர்கள் பணி நியமனம் குறித்து விவாதிக்க நேற்று அறநிலையத்துறையின் சார்பில் 47 திருக்கோயில்களின் இணை ஆணையர்கள், அர்ச்சகர்கள், பட்டாசார்யர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது.

திருக்கோயில்கள் 
 திருமணஞ்சேரி
திருக்கோயில்கள் திருமணஞ்சேரி

அதில் பேசிய சேகர்பாபு, ''ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி அடிப்படையில் பணியில் இருக்கும் அர்ச்சகர்கள் மற்றும் பட்டாச்சார்யர்களை நிரந்தரம் செய்வதற்கான பரிந்துரைகளை அனுப்புங்கள்'' என்றும் அதேவேளையில் ''அதில் எந்தவிதமான பாகுபாடும் காட்டக்கூடாது'' என்றும் கூறினார்.

குறிப்பாக வயதைக் காரணம் காட்டி அவர்களுக்கான வாய்ப்பை மறுக்கக்கூடாது என்று கூறியவர், அவர்களுக்கும் வேலை என்பது முக்கியம். ஐந்து ஆண்டுகளாக அவர்கள் அந்தந்தக் கோயில்களில் சேவை செய்துள்ளனர். எனவே அவர்களுக்கான வாய்ப்பை மறுக்க வேண்டாம் என்றும் கண்டிப்புடன் கூறினார்.

மேலும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையைக் கோடிட்டுக் காட்டி, ''ஓய்வு பெறும் வயதைக் கடந்தவர்களையும் பணியிலிருந்து அனுப்பப் போவதில்லை. அவர்களும் தொடர்ந்து பணியில் இருப்பார்கள்'' என்று தெரிவித்தார். சாத்தூரில் 69 வயதான அர்ச்சகருக்கு உதவும் வகையில் இளைஞர் ஒருவர் பணி அமர்த்தப்பட்டிருக்கிறார் என்பதை உதாரணமாகக் குறிப்பிட்டார்.

அமைச்சரின் இந்தக் கருத்தை அர்ச்சகர்கள் மற்றும் பட்டாசார்யர்கள் வரவேற்றனர். அதேவேளை உதவி ஆணையர் ஒருவர் அர்ச்சகர்களைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மிரட்டும் தொனியில், எழுதியிருந்த கடிதம் குறித்துக் கேட்டனர்.

திருச்செந்தூர் முருகன் கோயில்
திருச்செந்தூர் முருகன் கோயில்

அதற்கு பதிலளித்த அமைச்சர், "அப்படி எந்தக் கட்டாயமும் இல்லை. சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவுகின்றன. அர்ச்சகர்கள் கட்டாயம் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. கோயில் பணி காரணமாகவோ அல்லது உடல்நலக் கோளாறு காரணமாகவோ யாரேனும் கலந்துகொள்ள முடியவில்லை என்றால் அதில் பிழையில்லை" என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு