Published:Updated:

‘கூப்பிட்டா ஓடி வருவாள் காளியம்மா!’

நாட்டுப்புறப் பாடகி ப்ரியசக்தி
பிரீமியம் ஸ்டோரி
நாட்டுப்புறப் பாடகி ப்ரியசக்தி

குறிப்பாக அவர் `பத்ரகாளி' பாடலைப் பாடத் தொடங்கியதுமே பலரும் கூடவே இணைந்துப் பாட ஆரம்பித்துவிட்டார்கள்.

‘கூப்பிட்டா ஓடி வருவாள் காளியம்மா!’

குறிப்பாக அவர் `பத்ரகாளி' பாடலைப் பாடத் தொடங்கியதுமே பலரும் கூடவே இணைந்துப் பாட ஆரம்பித்துவிட்டார்கள்.

Published:Updated:
நாட்டுப்புறப் பாடகி ப்ரியசக்தி
பிரீமியம் ஸ்டோரி
நாட்டுப்புறப் பாடகி ப்ரியசக்தி

ருக்கன்குடி மாரியம்மன் கோயில். ஆயிரக்கணக்கான மக்கள் அந்தத் தெய்விகக் குரலிலும் சிலிர்க்கவைக்கும் இசையிலும் மெய்ம்மறந்து போயிருந்தனர். சில பாடல்களுக்குப் பக்தர்கள் அருள் வந்து ஆடவும் செய்தனர். அப்படி அவர்களை இறைலயத்தில் வயப்படுத்திய கம்பீரப் பாட்டுக் குரலுக்குச் சொந்தக்காரர் - நாட்டுப்புறப் பாடகி ப்ரியசக்தி.

குறிப்பாக அவர் `பத்ரகாளி' பாடலைப் பாடத் தொடங்கியதுமே பலரும் கூடவே இணைந்துப் பாட ஆரம்பித்துவிட்டார்கள். கச்சேரி முடியும்வரை காத்திருந்து கேட்டுமுடித்தோம். தென் மாவட்டம் முழுக்க பிரபலமாகிவரும் அந்த இறையிசைப் பாடகியை அவரது சொந்த ஊரான சங்கரன்கோவிலில் சந்தித்துப் பேசினோம். எளிமையாக மண் மணம் மாறாமல் பேசினார்.

‘கூப்பிட்டா ஓடி வருவாள் காளியம்மா!’

`‘நான் பிறந்தது கோவில்பட்டி பக்கத்துல பிள்ளையார்நத்தம் ஊர். அப்பா பெரிய நாட்டுப்புறப் பாடகர்; பெயர் கந்தசாமி நாயக்கர். ஊர் ஊராப் போயி பாடிட்டு வருவார். அம்மாவும் ரொம்ப நல்லா கிராமியப் பாடல்களைப் பாடுவாங்க. அப்பா அம்மா ரெண்டுபேருமே பாடினதால, எனக்கும் சின்ன வயசுல இருந்தே கிராமியப் பாடல்கள் தானாவே பாட வந்துடுச்சி. ஆனாலும் வீட்டிலேயே பாடுவேனே தவிர, வேறே எங்கயும் பாடமாட்டேன். பிறகு பள்ளிக்கூடத்துல பாட ஆரம்பிச்சேன். பத்தாம் வகுப்பு வரை படிச்சேன். பிறகு கல்யாணம் ஆகி சங்கரன்கோவில் செவல்குளம் ஊருக்குப் போயிட்டேன்.

கல்யாணத்துக்குப் பிறகு 8 ஆண்டுகள்... குழந்தைகளை வளர்க்கறது, வீட்டு வேலை, காட்டு வேலைன்னு போயிடுச்சு. நான் எப்பவாச்சும் பாடுற தெம்மாங்குப் பாட்டுகள், கும்மிப் பாடல்கள், அம்மன் பாடல்களைக் கேட்டு எங்க வீட்டுல எல்லாரும் பாடச் சொல்லி கேட்டாங்க. அப்படியே கொஞ்ச கொஞ்சமா அம்மன் கோயில்கள்ல ஆரம்பிச்சு திருச்செந்தூர், பழநி, குலசேகரம், இருக்கன்குடி, சென்னைன்னு பல இடங்களில் பாடிட்டேன். எல்லாம் அந்த ஆத்தா அருள்; நம்மகிட்ட என்ன இருக்குங்க...” என்கிறார் சிரித்தபடி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘கூப்பிட்டா ஓடி வருவாள் காளியம்மா!’

மங்கலகரமானத் தோற்றம், இனிமையான சுபாவம், அசர வைக்கும் குரல் வளம் என்று இருப்பதால் இவர் பாடப் போகும் இடமெல்லாம் அதீத வரவேற்பு! பக்தி இசைக்குயில் விருது, கே.பி.சுந்தராம்பாள் விருது, வீதி விழா விருது என பல இடங்களில் இவர் கௌரவப்படுத்தப்பட்டாலும் மிக எளிமையாகவே இருக்கிறார்.

“முறைப்படி சங்கீதம் கத்துக்கல ஐயா. அந்த வருத்தம் எனக்கு எப்பவும் உண்டு. ஆனா என்ன, கேள்வி ஞானமாவே எனக்குப் பாடல் வரிகள் மனப்பாடம் ஆயிடுச்சி. அந்த மகமாயி கொடுத்த குரல் வளம் மக்களுக்கும் பிடிச்சிப் போச்சு. மக்கள்கிட்ட போயி நெருக்கமா பாடுறது மனசுக்கு இதமா இருக்கு. நான் பாடும்போது அவங்க அருள் வந்து ஆடுறதும் அப்போ அருள்வாக்கு சொல்லி பலரைக் குளிரவைக்கிறதும் எனக்குக் கிடைச்ச பாக்கியமா நினைக்கிறேன்.

‘கூப்பிட்டா ஓடி வருவாள் காளியம்மா!’

நானும் வேகமா பாடும்போது பல முறை அருள் வந்து ஆடியிருக்கேன்; அருள்வாக்கு சொல்லியிருக்கேன். அந்த வாக்குகள் பலிச்சு மக்கள் சந்தோஷப் படும்போது, எல்லாம் அவள் செயல்னு எடுத்துப்பேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான் பாடி முடிச்ச பல இடங்கள்ல ஜனங்க என் கால்ல விழுந்து திருநீறும் குங்குமமும் கொடுங்கன்னு கேட்பாங்க. அதுதான் சங்கடமா இருக்கும். மறுத்தாலும் கேட்க மாட்டாங்க. சரி, அவங்க நம்பிக்கை; ஏதோ அம்மன் கருணையால் நல்லது நடக்கட்டும்னு நானும் பூசிவிடுவேன். அப்படி நம்பினவங்கள என் மகமாயியும் கைவிட்டது இல்லை. மழை பெய்யணும் கல்யாணம் ஆகணும்னு பல விஷயங்களுக்காக என்கிட்ட வந்து வேண்டிக்க சொல்வாங்க. நானும் வேண்டிப்பேன்; நல்ல வார்த்தைகள் சொல்லி அனுப்பிவைப்பேன்.

17 வருஷமா பாடிக்கிட்டு இருக்கேன். எவ்வளவோ இறை அனுபவங்கள்... எவ்வளவோ கண்ணீர்... எத்தனையோ வேண்டுதல்கள்... என கடந்து வந்திருக்கேன். என் பாட்டுக்கு ஒரு சக்தி இருக்குன்னே எளிய மக்கள் நம்புறாங்க. நானும் அவங்க விருப்பப்படியே பாடிட்டு வர்றேன்.

‘கூப்பிட்டா ஓடி வருவாள் காளியம்மா!’

பக்திப் பாடல்கள் மட்டுமல்ல; கும்மிப் பாடல்கள், திருமணப் பாடல்கள், விதை போடுற பாடல்கள், தாலாட்டுனு கிராமியப் பாடல்கள் அத்தனை வகையும் பாடுவேன். அது என்னமோ... அம்மன் பாடல்கள் பாடும்போதுதான் நிம்மதியும் சந்தோஷமும் கூடுதலா வருது. பல ஊர்கள்ல பாடி மழை வந்திருக்கு, சிலர் நோய் தீர்ந்ததுன்னு சொல்வாங்க. எல்லாம் அம்மன் அருள்தான். வேறென்ன சொல்றது...'' என்றவரிடம் குடும்பம் குறித்துக் கேட்டோம்.

``பிள்ளைங்க எல்லாம் வளர்ந்துட்டாங்க. பெரிய பொண்ணு டாக்டராகி இப்போ ஐ.ஏ.எஸ். படிப்புல தேறி ஐ.ஆர்.எஸ் பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்காங்க. பையன் பெரிய நிறுவனத்துல வேலை பார்க்கிறார்.

எனக்குன்னு இப்போ பெரிய பொறுப்புகள் எதுவும் இல்ல. இந்த மக்களுக்காக, அவங்க மகிழ்ச்சிக்காக எப்பவும் பாடிக்கிட்டே இருக்கணும். அதுதான் என் ஆசை. என்னை அவங்க ஏத்துக்கிட்டது நான் செஞ்ச புண்ணியம். அதேபோல், என் வீடும் என் குழுவினரும் தரும் ஆதரவுக்கும் நான் நன்றி சொல்லி ஆகணும்'' என்று கூறும் ப்ரியசக்தி, அடிக்கடி பாடப் போகும் இடம் இருக்கன்குடி மாரியம்மன் கோயில்!

``அந்த மாரியம்மா என் தாய் மாதிரி. அவள் பெயரைச் சொல்லி ஆனந்தமா பாடுவேன். அப்போ பலரும் சந்தோசமா என்கூட சேர்ந்து பாடியும் ஆடியும் அந்தத் தாயைக் கொண்டாடும் போது, எனக்கு அழுகையே வந்துடும். நான் பொறந்ததுக்கு இது போதும்னு இருக்கும்” என்று நெகிழ்ந்தவர், பிறகு ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்...

“என் வீட்டுல எனக்குப் பிறகு இந்தப் பாடல் களைப் பாடுறதுக்கு ஆள் இல்லையேன்னு அந்த ஆத்தாகிட்ட வேண்டினேன். இப்போ என் தம்பிப் பெண்களும், அண்ணன் பெண்களும் என்கூட சேர்ந்து பாடுறாங்க. நம் கிராமியப் பாடல்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு போய் சேர்க்கணும் அல்லவா... அதுதானே நாம் இந்தக் கலைக்குக் கொடுக்கும் மரியாதை...'' என்றார் சிரித்தபடி.

அவரின் விருப்பங்கள் நிறைவேற அம்மன் துணை நிற்பாள் என்று வாழ்த்தி வணங்கி விடைபெற்றோம். வெகுநேரம் வரை நம் செவிகளில் கம்பீரமாக ரீங்காரமிட்டுக் கொண் டிருந்தது அந்தப் பாடல்: `கூப்பிட்டா ஓடி வருவாளாம் காளியம்மா..!'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism