Published:Updated:

கிறிஸ்துவர்கள் புனித யாத்திரை உதவித் தொகை 50% அதிகரிப்பு! - ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

ஆண்டு வருமானம் மூன்று லட்ச ரூபாய்க்குள் உள்ள கிறிஸ்துவர்களுக்கு அவர்களின் புனித தலங்களான ஜெருசலேம், பெத்லஹேம் உள்ளிட்ட இடங்களுக்கு யாத்திரை செல்ல 60,000 ரூபாய் வழங்கப்படும்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

னது அதிரடி திட்டங்கள் மூலம் ஆந்திரர்களிடம் மட்டுமல்லாமல் அனைத்து மாநில மக்களின் மனங்களிலும் இடம்பிடித்து வருபவர், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாகத் தனது அமைச்சரவையில் ஐந்து துணை முதல்வர்களை நியமித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

முதியோருக்கான உதவித்தொகையை உயர்த்தியது, சனிக்கிழமை பள்ளிக்கு மாணவர்கள் புத்தகப் பையை எடுத்து வர வேண்டாம் என்று சொல்லி அவர்களுக்கான தனித்திறன் வகுப்புகளை அதிகரித்தது என, இவர் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகள் பல.

அந்த வரிசையில் ஜெகன்மோகன் ரெட்டி, தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிற்படுத்தப்பட்ட கிறிஸ்துவர்களின் புனித யாத்திரைக்கான உதவித்தொகை 50% அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெருசலேம்
ஜெருசலேம்

கிறிஸ்துவர்களின் புனித தலங்களான ஜெருசலேம், பெத்லஹேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா கடல் ஆகிய இடங்களுக்குச் செல்ல உதவித்தொகை கொடுக்கும் திட்டம் 2013-ல் கொண்டுவரப்பட்டு, யாத்திரை பயணிகளுக்கு இதன் மூலம் 20,000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்தத் தொகையை 20,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாக, 2016-ல் ஆந்திர முதல்வராகயிருந்த சந்திரபாபு நாயுடு தன்னுடைய ஆட்சிக் காலத்தில் உயர்த்தினார்.

`வினாத்தாள் விவகாரத்தில் சிக்கியவர், கல்வி பற்றிப் பேசலாமா?' -ஜெகனை விளாசிய சந்திரபாபு நாயுடு மகன்

தற்போது ஜெகன்மோகன் ரெட்டி, இந்தத் தொகையை மேலும் அதிகரித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், ஆண்டு வருமானம் மூன்று லட்ச ரூபாய்க்குள் உள்ள கிறிஸ்துவர்களுக்கு அவர்களின் புனித தலங்களான ஜெருசலேம், பெத்லஹேம் உள்ளிட்ட இடங்களுக்கு யாத்திரை செல்ல 60,000 ரூபாய் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

மேலும், 3 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளரின் உத்தரவுப்படி 20,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய்வரை யாத்திரை உதவித்தொகையாகக் கிடைக்கும். இந்தத் திட்டத்தால் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிறிஸ்துவர்களும் புனித யாத்திரை மேற்கொண்டு பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.