Published:Updated:

சீர்காழி கோயில்களுக்கு ஜப்பான் நாட்டினர் வருகை - கொரோனாவிலிருந்து விடுபட வேண்டி சாமி தரிசனம்!

சீர்காழி கோயில்களில் ஜப்பான் நாட்டினர்

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பாலகும்ப குருமுனி என்கின்ற தக்கா யூகி என்பவர் தலைமையில் ஏராளமானோர் சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு வந்து இந்து முறைப்படி சாமி தரிசனம் செய்தனர்.

சீர்காழி கோயில்களுக்கு ஜப்பான் நாட்டினர் வருகை - கொரோனாவிலிருந்து விடுபட வேண்டி சாமி தரிசனம்!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பாலகும்ப குருமுனி என்கின்ற தக்கா யூகி என்பவர் தலைமையில் ஏராளமானோர் சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு வந்து இந்து முறைப்படி சாமி தரிசனம் செய்தனர்.

Published:Updated:
சீர்காழி கோயில்களில் ஜப்பான் நாட்டினர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமையாதீன பரிபாலனத்திலுள்ள சட்டைநாதர் திருக்கோயில் உள்ளது. இந்தக்  கோயிலில் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர், ஸ்ரீதிருநிலைநாயகி மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோர் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 

சீர்காழி கோயில்களில் ஜப்பான் நாட்டினர்
சீர்காழி கோயில்களில் ஜப்பான் நாட்டினர்

இங்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பாலகும்ப குருமுனி என்கின்ற தக்கா யூகி என்பவர் தலைமையில் ஏராளமானோர் சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு வந்து இந்து முறைப்படி சாமி தரிசனம் செய்தனர். மேலும் கொரோனா தொற்றிலிருந்து அனைத்து மக்களும் நலமுடன் வாழ வேண்டி நோய் தீர்க்கும்  ஸ்தலங்களில் வேண்டி வருவதாகத் தெரிவித்தனர். இவர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது. 

சீர்காழி கோயில்களில் ஜப்பான் நாட்டினர்
சீர்காழி கோயில்களில் ஜப்பான் நாட்டினர்

தொடர்ந்து சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோவிலுக்குச் சென்றனர். நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இக்கோயிலில் வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி, முத்துக்குமாரசாமி மற்றும் தன்வந்திரி ஆகிய சந்நிதிகளில் சிறப்பு வழிபாடு செய்தனர்.