Published:Updated:

ஜூலை 5 சந்திர கிரகணம்... இந்தியாவில் தெரியுமா?

சந்திர கிரகணம்
சந்திர கிரகணம்

இந்த ஆண்டில் நிகழும் மூன்றாவது சந்திர கிரகணம் இது. இந்த கிரகணம், இந்திய நேரப்படி காலை 8.37 முதல் 11.22 வரை நீடிக்கிறது.

வானியல் நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானவை கிரகணங்கள். சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் உண்டு. இந்த ஆண்டு ஜூன் 21 ம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, வரும் ஞாயிற்றுக்கிழமை (5/7/20) அன்று சந்திர கிரகணம் நடைபெற உள்ளது.

சந்திர கிரகணம்
சந்திர கிரகணம்

இந்த ஆண்டில் நிகழும் மூன்றாவது சந்திர கிரகணம் இது. இந்த கிரகணம் இந்திய நேரப்படி காலை 8.37 முதல் 11.22 வரை நீடிக்கிறது. மொத்தம் 2 மணி நேரம் 45 நிமிடம் நீடிக்கும் இந்த சந்திர கிரகணம், புற நிழல் சந்திர கிரகணமாகும். புறநிழல் சந்திர கிரகணம் (Penumbral Lunar Eclipse) என்பது, புவியின் புறநிழல் வழியாக நிலவின் ஒரு பகுதி கடந்து செல்லும்போது ஏற்படுவது. அப்போது, நிலவின் பகுதி இருண்டு காணப்படும். இதுபோன்ற கிரகணம் இந்த ஆண்டில் இதற்கு முன்பு ஜனவரி 10 -ம் தேதியும் ஜூன் 5 -ம் தேதியும் நிகழ்ந்தது.

5-ம்தேதி நடைபெற இருக்கும் இந்த சந்திர கிரகணத்தை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் காணலாம் என்கிறனர் வானியல் அறிஞர்கள். பகல் பொழுதில் இந்த கிரகணம் ஏற்படுவதால், இந்தியாவில் இதைக் காணமுடியாது.

சந்திர கிரகணம்
சந்திர கிரகணம்

கிரகணம் ஏற்பட்டால், அந்த நாளில் சிறப்பு சடங்குகளை மேற்கொள்வது வழக்கம். மேலும், கோயில் நடைகள் மூடப்படுவதும் உண்டு. ஆனால், இந்த கிரகணம் புற நிழலால் உருவாவதாலும், நம் நாட்டில் தெரிய வாய்ப்பில்லை என்பதாலும் அவற்றைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.

அடுத்த கட்டுரைக்கு