Published:Updated:

"கமலமுனி சித்தரின் சிறப்புகள் இன்றைய தலைமுறையையும் சென்றடையும்!" - ஜன்ம தின குருபூஜையில் அமைச்சர்

அமைச்சர் சேகர்பாபு

"தி.மு.க. ஆட்சி இறையன்பர்களுக்கும், இறை வழிப்பாட்டுக்கும் உரிய ஆட்சி!" - அமைச்சர் சேகர்பாபு

"கமலமுனி சித்தரின் சிறப்புகள் இன்றைய தலைமுறையையும் சென்றடையும்!" - ஜன்ம தின குருபூஜையில் அமைச்சர்

"தி.மு.க. ஆட்சி இறையன்பர்களுக்கும், இறை வழிப்பாட்டுக்கும் உரிய ஆட்சி!" - அமைச்சர் சேகர்பாபு

Published:Updated:
அமைச்சர் சேகர்பாபு

திருவாரூரில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் கமலமுனி சித்தரின் ஜன்ம தின குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். இவ்விழாவினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

இவ்விழாவிற்குத் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் இரா.கண்ணன், திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

இந்நிகழ்ச்சியில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு,

"தமிழக முதல்வர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறையின் சட்டப்பேரவை அறிவிப்பு எண் 21 படி மூன்று சித்தர்களுக்கு விழா எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மூன்று சித்தர்களில் மூத்த சித்தர் அருள்திரு கமலமுனி சித்தர், இரண்டாவது வெள்ளியங்கிரி பாம்பாட்டிச் சித்தர், மூன்றாவது சித்தர் மதுரை சித்தர். அதன்படி திருவாரூர் மாவட்டம் அருள்திரு கமலமுனி சித்தர் ஜன்ம தின குரு பூஜை விழாவானது நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கமலமுனி சித்தரின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்து இன்றைய தலைமுறையினர் அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழக முதலமைச்சர் இந்து சமய அறநிலையத்துறை வாயிலாகக் கோயில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ஆணையிட்டதன் அடிப்படையில் தமிழகத்தில் கோயில்களில் புனரமைப்புப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. சட்டப்பேரவையில் அறிவித்ததைச் செயல்படுத்துவதே தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் கடமையாகும்" எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கிய மூன்று சித்த மருத்துவர்களுக்குக் கேடயம் வழங்கி அமைச்சர் சேகர் பாபு பாராட்டுத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகன சுந்தரம், உதவி ஆணையர்கள் மணவழகன், ராணி, செயலர் அலுவலர் கவியரசு உள்ளிட்ட பலர் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

அதைத் தொடர்ந்து அதே திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் வளாகத்தில் 29 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கல்தேர் அமைப்பதற்கான திருப்பணியை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு, "மனுநீதி சோழனுக்குக் கருங்கல் சிலை அமைத்தல், 28 மீட்டர் சுற்றுச்சுவர் அமைத்தல், கருங்கல் தளம் அமைத்தல், வண்ணப்பூசுதல் உள்ளிட்ட மிக முக்கியமான புனரமைப்புப் பணிகள் நடைபெறும்.

வெள்ளியங்கிரி மலை, சதுரகிரி மலை, பர்வத மலை, போரூர் நரசிங்கப் பெருமாள் மலை, கண்ணகி கோயில் அமைந்துள்ள மலை ஆகியவற்றில் பழைமை மாறாமல், பக்தர்கள் சென்று வருவதற்கானப் பாதைகள் அமைக்கவும், அடிப்படை வசதிகளைச் செய்து தரவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக ஆரம்பக்கட்ட நிதியாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். தி.மு.க. ஆட்சி இறையன்பர்களுக்கும், இறை வழிப்பாட்டுக்கும் உரிய ஆட்சி" எனத் தெரிவித்தார்.

இவ்விழாவில் தியாகராஜ சுவாமி திருக்கோயில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism