Published:Updated:

கந்த சஷ்டி: "கடைத்தேற்றத்திற்கு சிறந்த பக்தி, முருக பக்தி!"- இந்திரா சௌந்தரராஜன் பேச்சு

கந்த சஷ்டி - இந்திரா சௌந்தரராஜன்

மதுரை ஸ்ரீ மகா பெரியவா கோயிலில் நடந்த கந்த சஷ்டி சிறப்பு நிகழ்ச்சியில் இந்திரா சௌந்தரராஜன் பேச்சு.

கந்த சஷ்டி: "கடைத்தேற்றத்திற்கு சிறந்த பக்தி, முருக பக்தி!"- இந்திரா சௌந்தரராஜன் பேச்சு

மதுரை ஸ்ரீ மகா பெரியவா கோயிலில் நடந்த கந்த சஷ்டி சிறப்பு நிகழ்ச்சியில் இந்திரா சௌந்தரராஜன் பேச்சு.

Published:Updated:
கந்த சஷ்டி - இந்திரா சௌந்தரராஜன்

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், எஸ்.எஸ்.காலனியிலுள்ள ஸ்ரீ மகா பெரியவா கோயிலில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கந்த சஷ்டி
கந்த சஷ்டி

இதில் கலந்து கொண்டு கந்தன் வருவான் என்ற தலைப்பில் பேசிய பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன், "நம் முன்னோர்கள் நாம் தெரிந்தும் தெரியாமல் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரம் சொல்லி இருக்கிறார்கள். கந்த சஷ்டி அன்று முருகப்பெருமானை மனதார தியானிக்க வேண்டும். வாழ்க்கையில் தெரிந்தும் தெரியாமல் செய்கிற பாவத்தை உடனடியாகப் போக்கிவிடும் சக்தி சஷ்டி விரதத்திற்கு உண்டு.

தெரிந்தும் தெரியாமல் செய்கிற பாவத்தை உடனடியாகப் போக்கிவிட வேண்டும். வாசலில் கோலம் போடுவது பசித்த வயிறுக்கு உணவளிப்பது தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டு தேரை இழுப்பது கோயிலை சுத்தம் செய்வது போன்ற காரியங்கள் நமது பாவங்களைப் போக்கும்.

இந்திரா சௌந்தரராஜன்
இந்திரா சௌந்தரராஜன்

ரிஷி கடன், பித்ரு கடன், தேவ கடன் என்ற மூன்று காரியங்களை பிராமணர்கள் செய்ய வேண்டும். காயத்ரி ஜெபத்திற்கு பெரிய மகிமை உண்டு. உலகத்தில் பெண்களைக் கொடுமைப்படுத்துவதும் பெற்றோர்களை முறையாக பராமரிக்காமல் இருப்பதும் பசுவிற்குத் தீங்கிழைப்பது போன்றவை பெரிய பாவங்கள். இது மறு ஜென்மத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

விரதங்களில் சிறப்பான விரதம் சஷ்டி விரதம். பாவங்களைப் போக்குவதும் குழந்தை வரமும் சஷ்டி விரதம் மூலம் கிடைக்கும். சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பார்கள். சஷ்டியில் விரதம் இருந்தால் அகமாகிய கருப்பைக்குள் பிள்ளை வரும் என்பதுதான் அதன் தாத்பரியம்.

கந்த சஷ்டி
கந்த சஷ்டி

விரதங்களில் ஏகாதசி விரதம், சிவராத்திரி விரதம் கௌரி நோன்பு, சதுர்த்தி விரதம் போன்றவை சிறப்பானது. இதில் சஷ்டி விரதத்தில் சர்வமும் அடங்கும். சிவன், பார்வதி விஷ்ணு, பிரம்மா, தேவர்கள் ஆகிய அனைத்து மூர்த்திகளும் முருகப்பெருமானில் அடங்குவர். முருக பக்தி என்பது பின்பற்றுவதற்கும் கடைதேற்றத்திற்கும் சிறந்த பக்தி.

காஞ்சி மகா பெரியவர் வேறு முருகப்பெருமான் வேறு அல்ல. மகா பெரியவரின் பூர்வாசிரமப் பெயர் சுவாமிநாதன்" என்று பேசினார்.