Published:Updated:

காரைக்கால்: கனவில் வந்து பலன் தரும் பத்ரகாளியம்மன் - நம்பிக்கையால் குவியும் பக்தர்கள்!

பத்ரகாளியம்மன்
பத்ரகாளியம்மன்

காரைக்காலை அடுத்த மேலகாசாக்குடியில் கனவில் வந்து பலன் கூறும் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலுக்கு அனைத்து ஊர்களிலிருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

காரைக்காலிலிருந்து மேற்கில் 5 கி.மீ. தொலைவிலுள்ள மேலகாசாகுடி கிராமத்தில் எட்டுத் திசைகளிலும் கிராம தேவதைகளின் கோயில்கள் அமைந்திருக்கின்றன. கிராமத்தின் நடுவில் எழுந்தருளியிருக்கிற அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன்தான் இங்கு முக்கிய ஆன்மிக மையமாகத் திகழ்கிறது. பக்தர்களின் கோரிக்கைகளுக்கு ஸ்ரீ பத்ரகாளியம்மன் அன்றிரவே கனவில் தோன்றி பிரச்னைக்கான தீர்வினைச் சொல்லி மறைவதாக, பல நூற்றாண்டுகளாய்  நம்பிக்கை நிலவுகிறது.

இக்கோயிலுக்கு சர்வ மதத்தினரும் வருகின்றனர். அம்மனின் முகம் பார்த்து மனதில் இருக்கிற கஷ்டங்களைக் கூறுகின்றனர். பக்தர்கள் காணிக்கை எதையும் எடுத்து வர வேண்டியதில்லை. வெறுங்கையுடன்கூட வரலாம். அம்மன் மீதுள்ள நம்பிக்கைதான்  முக்கியம் என்கின்றனர்.

காரைக்கால்
காரைக்கால்

இதுபற்றி கோயில் நிர்வாகத்தில் பேசினோம்.

"இந்தத் திருத்தலத்துக்கு வருகிற பக்தர்கள் அம்மனை, முகத்துக்கு முகம் பார்த்து, மனதில் உள்ளதைச் சொல்ல வேண்டும். 

திருமணத்துக்குத் தயாராகிற பெண்கள் இங்கு படையெடுத்து வருகின்றனர். இங்குள்ள அம்மனை தரிசித்தால், புகுந்த வீட்டில் விரும்பிய சூழல் தானாகவே உருவாகிவிடும். பலர், தங்களின் கோரிக்கைகளைக் காகிதத்தில் எழுதி, அம்மனின் பாதத்தில் வைக்கின்றனர். மறு வாரமே இதற்குத் தீர்வு கிடைத்துவிடுகிறது என்றும் கூறுகின்றனர்.

மனதை அரித்துக் கொண்டிருக்கிற உறுத்தல், குற்ற உணர்வு, சந்தேகம், அச்சம், குழப்பம், அனைத்துக்கும் இத்திருத்தலத்தில் தீர்வு உண்டு. நாள்பட்ட நோய்கள் மற்றும் குடும்பக் குழப்பங்களுக்கு ஸ்ரீ பத்ரகாளியம்மன் தீர்வு தருவுவதாக நம்பிக்கை உண்டு.

பத்ரகாளியம்மன்
பத்ரகாளியம்மன்

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, குடும்ப உறவுகளுக்குள் தீர்க்கவே முடியாத பல விவகாரங்களுக்கு இந்த அம்மன் தீர்வு சொல்வதாகச் சொல்கின்றனர். திருநள்ளாறு அடுத்த அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு கோடைத் திருவிழா காப்பு கட்டிய 7 நாள்களில் மேலக்காசாக்குடி ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு காப்பு காட்டித் திருவிழா நடத்தி வருகிறோம்.

வருடம் முழுவதும், தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்கிற பக்தர்கள் இத்திருவிழாவில் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அசைவ உணவை ஒதுக்கி, கையில் மஞ்சள் கயிற்றைக் கட்டி நோன்பிருப்பார்கள். ஸ்ரீ பத்ரகாளியிடம் கோரிக்கை நிறைவேறியதும் பாலாபிஷேகம், காவடி, பாடை கட்டுதல் போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்துவார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, பட்டுப்புடவை, மலர் அலங்காரம், காய்கனி அலங்காரம் என்று செய்து குளிர வைத்து அழகு பார்க்கின்றனர்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு