Published:Updated:

காரைக்கால்: 63 ஆண்டுகளுக்கு முன் களவுபோன சிலைகள் - லண்டனிலிருந்து மீட்டுக்கொண்டுவரும் அதிகாரிகள்!

களவுபோன சிலைகள்
களவுபோன சிலைகள்

லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள அச்சிலைகளை மீட்பதற்கு கிராமத்தின் மூத்த குடிமக்களிடம் மத்திய அரசின் உளவுப்பிரிவு அதிகாரிகள் தகவல் திரட்டிச் சென்றுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காரைக்காலிலிருந்து 63 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட பிரசித்திபெற்ற ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயில் சிலைகள் லண்டனில் இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலைகளை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலுள்ள மேலகாசாக்குடி கிராமத்தில் ஸ்ரீ நாகநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. திருநாகேஸ்வரத்துக்கு அடுத்தபடியான ராகு - கேது ஸ்தலமாக ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் விளங்கி வருகிறது. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் பராமரிப்பில் இருக்கிற இக்கோயில் தேவஸ்தானத்தின்கீழ் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலும் உள்ளது. பழம்பெருமை வாய்ந்த இத்திருக்கோயிலின் சிலைகள் 1958-ம் ஆண்டில் களவுப்போனதாக கூறப்பட்டது. அந்தச் சிலைகளுக்கு மாற்றாக வைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு இன்று வரை தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீ நாகநாதசுவாமி திருக்கோயில்
ஸ்ரீ நாகநாதசுவாமி திருக்கோயில்

இக்கோயிலில் பல வருடங்களுக்கு முன் திருடப்பட்ட ஸ்ரீராமர், சீதா, லட்சுமணன், அனுமான் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் லண்டன் மியூசியத்தில் இருப்பதாக, ஒரு தகவல் ஓராண்டுக்குமுன், காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு காவல் நிலையத்துக்கு கடிதம் வந்ததாக தகவல் வெளியானது. காவல்நிலையத்துக்கு வந்த கடிதம் பிரெஞ்சு மொழியில் இருந்ததால், அக்கடிதத்திலிருந்த சாராம்சத்தை போலீசாரால் அறிய முடியவில்லை எனவும், அதனாலாயே அச்சிலைகள் விவகாரம் அமுங்கிப் போனதாகவும் கூறப்பட்டது.

தற்போது லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள அச்சிலைகளை மீட்பதற்கு கிராமத்தின் மூத்த குடிமக்களிடம் மத்திய அரசின் உளவுப்பிரிவு அதிகாரிகள் தகவல் திரட்டிச் சென்றுள்ளனர்.

பல வருடங்களுக்கு முன் தங்கள் கிராமத்திலுள்ள ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயிலில் திருடப்பட்ட சிலைகள், மீண்டும் தரிசனத்திற்கு வரவிருக்கும் தகவல், மேலக்காசாக்குடி கிராம மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு