Published:Updated:

`2,668 அடி உயர மலையில் கார்த்திகை மகாதீபம்!' - திருவண்ணாமலையில் எதிரொலித்த `அரோகரா' கோஷம்

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம்
திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம்

கோயில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டு, சுமார் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலை மீதும், மகா தீபம் ஏற்றப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 7-ம் தேதி வெகு விமரிசையாகத் தேரோட்டம் நடந்து முடிந்தது. 10-ம் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபம் ஏற்பட்டது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

அதற்கு முன்னதாக, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைரக்கிரீடம் மற்றும் தங்க கவசமும், உண்ணாமுலையம்மனுக்கு தங்கக் கவசமும் அணிவித்துச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.

`அண்ணாமலையாருக்கு அரோகரா..!’- திருவண்ணாமலை தீபத்திருவிழா தேரோட்டம் புகைப்படத் தொகுப்பு

அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்குக் கோயிலில் உள்ள தங்கக் கொடி மரம் எதிரே உள்ள சிவபெருமான், அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளித்தார். அப்போது, கோயில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டு சுமார் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலை மீதும், மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

தீபம் ஏற்றப்பட்டபோது கோயிலில் குவிந்திருந்த பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா" என்று பக்தி முழக்கங்களை எழுப்பி, அர்த்தநாரீஸ்வரரைத் தரிசனம் செய்தனர். வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மகா தீபத்தை முன்னிட்டு, 5 அடி உயரத்துடன், 200 கிலோ எடை கொண்ட மகாதீப கொப்பரையும் அதற்கு ஆயிரம் மீட்டர் திரி மற்றும் 3,500 கிலோ நெய் ஆகியவை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

மகா தீபத்தை முன்னிட்டு, 5 அடி உயரத்துடன், 200 கிலோ எடை கொண்ட மகாதீப கொப்பரையும், அதற்கு 1,000 மீட்டர் திரி மற்றும் 3,500 கிலோ நெய் ஆகியவை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முக்கியமாகக் கொடிமரம் எதிரே குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டும் காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரரைக் காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் குவிந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு