Published:Updated:

ஆருத்ரா தரிசனம், திருக்கல்யாண உற்சவம் - கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் கோலாகல நிகழ்ச்சி!

திருக்கல்யாண உற்சவம்

புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஆருத்ரா தரிசனம், திருக்கல்யாண உற்சவம் - கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் கோலாகல நிகழ்ச்சி!

புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Published:Updated:
திருக்கல்யாண உற்சவம்

கரூரில் பிரசித்திபெற்ற புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்கார வல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். இந்தக் கோயிலில், மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் ஆலய மண்டபத்தில், சுவாமி ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர், ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகியுடன் காட்சியளித்தார். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். அதைத்தொடர்ந்து, ஆலயத்தில் சிவாசார்யர்கள் பிரத்யேகமாக குண்டங்கள் அமைத்து, வேள்வி நடத்தினர். தொடர்ந்து, கூடியிருந்த பக்தர்கள் முன்னிலையில் கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரநாயகி அம்பிகைக்குத் திருக்கல்யாணம், மேள தாளங்கள் முழங்க நடைபெற்றது.

திருக்கல்யாண உற்சவம்
திருக்கல்யாண உற்சவம்

அதைத் தொடர்ந்து, மாலை மாற்றும் நிகழ்ச்சியும், பால், பழம் வழங்கும் நிகழ்ச்சியும், மொய் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர், அனைத்து பக்தர்களும் வரிசையில் நின்று கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கல்யாணக் கோலத்தைக் கண்டு களித்தனர். தொடர்ந்து, அனைவருக்கும் மஞ்சள் கயிறு, பட்டாடை உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கி சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் மற்றும் நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். கரூர் ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயாகி சமேத ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி மாத ஆருத்ரா தரிசனத் திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சியைக் காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மிக பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்தனர். அதோடு, 'ஓம் நமச்சிவாய' என்ற கோஷத்துடன், பக்தி பெருக்குடன் சாமி தரிசனம் செய்தனர்.