Published:Updated:

கரூர்: கங்கா ஆரத்தி தெரியும், அமராவதி ஆரத்தி தெரியுமா? ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து வணங்கிய ஊர் மக்கள்!

அமராவதி ஆற்றை வணங்கும் நிகழ்வு

"அமராவதி ஆற்றில் இப்போது உள்ளதுபோல் எப்போதும் நீர் நிறைந்திருக்க வேண்டும். இந்த ஆறு வற்றாத ஆறாக மாற வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் அமராவதி ஆற்றில் நீர் பெருக்கெடுத்துச் செல்ல வேண்டும்" என்று மக்கள் வேண்டிக்கொண்டனர்.

கரூர்: கங்கா ஆரத்தி தெரியும், அமராவதி ஆரத்தி தெரியுமா? ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து வணங்கிய ஊர் மக்கள்!

"அமராவதி ஆற்றில் இப்போது உள்ளதுபோல் எப்போதும் நீர் நிறைந்திருக்க வேண்டும். இந்த ஆறு வற்றாத ஆறாக மாற வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் அமராவதி ஆற்றில் நீர் பெருக்கெடுத்துச் செல்ல வேண்டும்" என்று மக்கள் வேண்டிக்கொண்டனர்.

Published:Updated:
அமராவதி ஆற்றை வணங்கும் நிகழ்வு
கரூரில் ஆடிப்பூரத்தில் பெருக்கெடுத்து ஓடும் அமராவதி ஆற்றுக்கு மக்கள் ஆரத்தி எடுத்த நிகழ்வு நடைபெற்றது. இந்து அமைப்பினர், பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டு, ஆற்றுக்கு ஆரத்தி எடுத்ததோடு, ஆற்றில் கற்பூர ஜோதியை மிதக்கவிட்டு வழிபட்டனர்.
அமராவதி ஆற்றை வணங்கும் நிகழ்வு
அமராவதி ஆற்றை வணங்கும் நிகழ்வு

ஆடி மாதத்தில் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளை பூஜிக்கும் விதமாக ஆடிப்பூர விழா நடப்பது வழக்கம். அந்த வகையில், கரூர் வழியாகச் செல்லும் அமராவதி ஆற்றில் இந்த விழாவை மக்கள் கொண்டாடினர். அமராவதி ஆறானது, திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் பிறந்து கரூர் நகர் வழியாகச் சென்று, கரூர் மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடலூரில் உள்ள காவிரி ஆற்றில் கலக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமராவதி ஆற்றை வணங்கும் நிகழ்வு
அமராவதி ஆற்றை வணங்கும் நிகழ்வு

ஆனால், பத்து வருடங்களுக்கு முன்புவரை அமராவதி ஆறு வற்றாத ஆறாக இருந்த நிலையில், அண்மைக்காலமாக வருடம் முழுவதும் காய்ந்துபோகும் நிலை ஏற்பட்டது. இருந்தாலும், கடந்த இரண்டு வருடங்களாக ஆடி மாதத்தில் அமராவதி அணைக்குப் நீர் பெருக்கெடுத்து வருவதால், உபரி நீர் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டுவருகிறது. இந்த நிலை தொடர வேண்டும் என்பதற்காக, கரூரில் அமராவதி ஆற்றுக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்வை இந்து அமைப்பினர் நடத்தினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிகழ்வில் அகில உலக துறவிகள் தலைவர் ராமானந்த மகராஜ், கரூர் உலக சிவனடியார் திருக்கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவா சதீஷ், நெரூர் கைலாச ஆசிரமம் அமர்நாத் சுவாமிகள், சின்மானந்தா சரஸ்வதி சுவாமி, இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர், பக்தர்கள், பொதுமக்கள் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் அமராவதி ஆற்றங்கரையில் சிறப்புப் பூஜைகள் நடத்தி, பின்னர் அமராவதி ஆற்றுக்கு தீப ஆராதனை காட்டினர்.

அமராவதிக்கு ஆரத்தி
அமராவதிக்கு ஆரத்தி

"அமராவதி ஆற்றில் இப்போது உள்ளதுபோல் எப்போதும் நீர் நிறைந்திருக்க வேண்டும். இந்த ஆறு வற்றாத ஆறாக மாற வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் அமராவதி ஆற்றில் நீர் பெருக்கெடுத்துச் செல்ல வேண்டும்" என்று வேண்டிக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கற்பூர ஜோதியை ஏற்றி ஆற்றில் விட்டு, பூஜைப் பொருள்களை அமராவதி ஆற்றில் கரைத்து அமராவதித் தாயை வணங்கினர்.