Published:Updated:

கீழ்ப்பாக்கம் ஶ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வரர் ஶ்ரீசோமசுந்தரர் ஆலயத்தில் 1008 கலச திருமஞ்சனம்!

ஶ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வரர்
ஶ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வரர்

சென்னை கீழ்ப்பாக்கம் அழகப்பா நகர், கோயில் தெருவில் ஶ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வரர் ஶ்ரீசோமசுந்தரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நேற்றும் இன்றும் ஏகோத்ர ஸஹஸ்ர கலசாபிஷேக உத்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பிரார்த்தனைகள், சங்கல்பங்கள், ஆராதனைகளோடு நேற்று காலையில் உத்சவம் தொடங்கியது. ஸோம கும்ப ஸ்தாபனம் முடிந்து வேத திவ்ய பிரபந்தம் தொடங்கியது. மஹா கும்ப ஸ்தாபனம், ஹோமம், சாற்றுமுறை, மஹா சயனம் என முதல்நாள் உற்சவம் நடந்தது. அடுத்தநாள் அதிகாலை கன்யா பூஜை, வாமன பூஜை, கோபூஜை ஆகிய சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை எட்டு மணியளவில், முக்கிய நிகழ்வான 1008 கலச திருமஞ்சனம் தொடங்கியது.

1008 கலச திருமஞ்சனம்
1008 கலச திருமஞ்சனம்

பெருமாள் திருமஞ்சனத்தை ஏராளமான பக்தர்கள் மதியம் வரையிலும் காத்திருந்து தரிசித்தனர். பின்னர், அலங்காரமானதும் பெருமாளுக்கு முன்பாக அன்னம் படைக்கப்பட்டது. அதனையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

`திருப்பதி தரிசன’ புண்ணியம்  அருளும் திருவடிசூலத்தில்... குருப்பெயர்ச்சி சிறப்புப் பரிகார ஹோமம்!

1958-ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த திருக்கோயில் ட்ரஸ்ட் மூலம் நடத்தப்பட்டு வருகின்றது. கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த சாய் சுதாகரிடம் பேசியபோது, ``இந்த சகஸ்ர கலசாபிஷேகம் என்பது லோகக்ஷேமத்துக்ககச் செய்யப்படுவது. இந்தப் பகுதியில் உள்ள அத்தனை பக்தர்களும் இங்கே கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். எல்லா தெய்வங்களும் இங்கு இருப்பதால் நித்தமும் திருநாளாய் கூட்டம் அலைமோதும். இங்கே கடவுளர்களிடம் பிரார்த்தித்தால் பலன் கூடும். இன்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு சுவாமிதரிசனமும் திருமஞ்சனமும் கண்டு கழித்தனர்" என்றார்.

1008 கலச திருமஞ்சனம்
1008 கலச திருமஞ்சனம்

ஆறுகால பூஜைகளும் இந்தத் திருக்கோயிலில் நடைபெறுகிறது. ஆலயத்துக்குள் சிவ மூர்த்தங்களும், வைணவ சந்நிதிகளும் உள்ளன. மூலவர்கள், ஶ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வரர் மற்றும் ஶ்ரீசோமசுந்தரர். சாயி பாபா, சரபேசுவரர், தன்வந்திரி, லட்சுமி நரசிம்மர், கிருஷ்ணர், லட்சுமி ஹயக்ரீவர், ராமர், ஆஞ்சநேயர், சரஸ்வதி, சத்யநாராயணர், ஐயப்பன், முருகன், துர்கை, நவகிரங்கள், விநாயகர் என சகல தெய்வங்களும் இந்தத் தலத்தில் அருளுகின்றனர்.

பின் செல்ல