Published:Updated:

சித்திரைத் திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் - எப்போது நடக்கின்றன?

முகூர்த்த கால் சிறப்பு பூஜைகள்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கி, 16-ம் தேதிவரை நடைபெறுவதாக கோயில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

சித்திரைத் திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் - எப்போது நடக்கின்றன?

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கி, 16-ம் தேதிவரை நடைபெறுவதாக கோயில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

Published:Updated:
முகூர்த்த கால் சிறப்பு பூஜைகள்
மதுரை என்றாலே நம் நினைவுக்கு வருவது சித்திரைத் திருவிழா. தென்னிந்தியாவின் கும்பமேளா என்று போற்றப்படும் இந்த நிகழ்வில் பல லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வர். இந்த விழா வரும் 5-ம் தேதி தொடங்குகிறது.
மீனாட்சியம்மன் கோயில்
மீனாட்சியம்மன் கோயில்

இதன் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வருகின்ற 14-ம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளதாகவும் அதைத் தொடர்ந்து ஏப்ரல் 16-ம் தேதி காலை 5.50 மணிக்கு மேல் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்று அழகர் கோயில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதுரை சித்திரை திருவிழாவின் கொட்டகை முகூர்த்தம் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலிலும், வண்டியூர் தேனூர் மண்டபத்திலும் நேற்று நடைபெற்றது.

கள்ளழகர் வருகைக்காக கொட்டகை முகூர்த்தம்
கள்ளழகர் வருகைக்காக கொட்டகை முகூர்த்தம்

விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வரும் கள்ளழகர் கோயில் இணை ஆணையர் அனிதா செய்தியாளர்களிடம் பேசும்போது, "14-ம் தேதி மாலை கள்ளழகர் அழகர் மலையிலிருந்து புறப்படுகிறார். மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் 16-ம் தேதி காலை 5.50 மணிக்கு மேல் 6.20க்குள் எழுந்தருள்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது வரை 456 மண்டபப்படிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கூடுதலாக மண்டபப்படிகள் வேண்டிவந்துள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. அழகர் இருக்கும் இடத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ள வசதியாக ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுக் கோயில் இணையதளம் மூலம் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கள்ளழகர் கோயில் இணை ஆணையர் அனிதா
கள்ளழகர் கோயில் இணை ஆணையர் அனிதா

இரண்டு ஆண்டுகளாகத் திருவிழா நடைபெறாத காரணத்தால் மண்டபத்திலே ஆய்வு செய்யக் குழு அமைக்கப்பட்டு அனைத்து மண்டபங்களும் ஆய்வு செய்யப்பட்டன. அதில் ஒரு மண்டகப்படி மட்டுமே பழுதாகி உள்ளதால் அதனைச் சரி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தண்ணி பீய்ச்சி அடிக்கும்போது பக்தர்கள் நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பாரம்பர்ய முறைப்படித் தோல் பை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அது தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களுக்குக் காவல்துறை மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism