உங்கள் வீட்டைக் கலைநயம் மிகுந்த பொருள்களால் அழகுபடுத்த வேண்டுமா... உங்கள் தோழிகளுக்கு விசேஷ நாள்களில் அழகான கலைப் பொருள்களைப் பரிசளிக்க வேண்டுமா... இதற்காக இனி கடைகளைத் தேடி ஓட வேண்டாம். வீட்டில் இருக்கும் சின்னச் சின்ன பொருள்களைக் கொண்டே அழகான கலைப்பொருள்கள் செய்வது எப்படி... உங்களின் தினசரி ஓய்வு நேரத்தில் அரைமணி நேரமே போதும் இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ள.

இந்த இதழில் `கொட்டைப்பாக்கு விநாயகர்' செய்வது எப்படி என்று கற்றுத்தருகிறார் கைவினை கலைஞர் பூமாதேவி. உங்கள் வீட்டுக்கு விநாயகரை வரவேற்கத் தயாரா..?

தேவையான பொருள்கள்:

முழு கொட்டைப்பாக்கு, வொயிட் எம்சீல் (White M-Seal - இது களிமண் பக்குவத்தில் இருக்கும் ஒருவகை களிம்பு. கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்), ஃபெவிகால், டால்கம் பவுடர், ஃபேப்ரிக் பெயின்ட், பிரஷ், டபுள் கம் டேப், கிண்ணம், தண்ணீர், வேஸ்ட் துணி.

ஸ்டெப் 1: முதலில் இரண்டு கைகளிலும் டால்கம் பவுடரை பூசிக்கொள்ளவும். பிள்ளையார் செய்யப் பயன்படுத்தப்போகும் வொயிட் எம்சீல் கைகளில் ஒட்டாமல் இருக்க இது உதவும்.

ஸ்டெப் 2: வொயிட் எம்சீல் பாக்கெட்டில் இருக்கும் வெள்ளை மற்றும் சாம்பல் நிற களிம்புகளைச் சம அளவில் எடுத்து, இரண்டையும் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ள வேண்டும். இவை விரைவிலேயே கெட்டியாகிவிடும் என்பதால் உடனே சிலை செய்யத் தொடங்கிவிட வேண்டும்.

ஸ்டெப் 3: பிசைந்து வைத்திருக்கும் வொயிட் எம்சீலை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 4: வொயிட் எம்சீலை விநாயகரின் கண், தொப்பை, கைகள் கால்கள், துதிக்கை, கிரீடம் செய்வதற்கு சிறியதும் பெரியதுமாக ஒன்பது உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 5: இப்போது கொட்டைப்பாக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு, படத்தில் காட்டியுள்ளவாறு அதன் மேற்பகுதியில் இரண்டு சிறிய எம்சீல் உருண்டைகளை எடுத்து ஃபெவிகாலின் உதவியுடன் விநாயகரின் கண் பகுதியை ஒட்டிக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 6: அடுத்ததாக நாம் உருட்டி வைத்திருப்பதில் கொஞ்சம் பெரிய உருண்டையை எடுத்து படத்தில் காட்டியுள்ளவாறு கொட்டைப்பாக்கின் மீது விநாயகரின் தொப்பை பகுதியைப் பொருத்த வேண்டும்.

ஸ்டெப் 7: பிறகு, சம அளவில் இருக்கும் இரண்டு உருண்டைகளை எடுத்து அவற்றைக் கையில் வைத்து நீள வாக்கில் லேசாக உருட்டி, விநாயகரின் கால் பகுதியை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 8: பாக்கில் கால் பகுதியை ஒட்டிய பிறகு, கொஞ்சம் பெரிய அளவில் இருக்கும் எம்சீல் உருண்டையை எடுத்து படத்தில் உள்ளபடி, அதை விநாயகரின் துதிக்கையாகப் பாக்கின் மீது ஒட்டிக்கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 9: அடுத்ததாக விநாயகரின் கை பகுதிக்காக, மீண்டும் இரண்டு சிறிய எம்சீல் உருண்டைகளை எடுத்து அவற்றை லேசாகத் தட்டையாக்கி படத்தில் கட்டியுள்ளவாறு ஏற்கெனவே நாம் பாக்கின் மீது பொருத்தி வைத்திருக்கும் கால்களின் மீது ஓட்ட வேண்டும்.

ஸ்டெப் 10: இறுதியாக எஞ்சியிருக்கும் ஓர் உருண்டையைச் சிறிய கூம்பு வடிவத்தில் மாற்றி அதை விநாயகரின் கிரீடமாகப் பொருத்திக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 11: கொட்டைப் பாக்கின் மீது பொருந்தி யிருக்கும் விநாயகர் சிலைக்கு வண்ணம் பூசுவதற்கு முன்பாக அதை 10 நிமிடங்கள் காற்றில் உலரவைக்கவும்.

ஸ்டெப் 12: நன்றாகக் காய்ந்த பிறகு, மஞ்சள், பச்சை, சிவப்பு என்று உங்களுக்குப் பிடித்த நிறத்தில் ஃபேப்ரிக் பெயின்டை பிரஷ்ஷில் எடுத்துக்கொண்டு சிலைக்கு வண்ணம் பூச வேண்டும்.

ஸ்டெப் 13: படத்தில் கட்டியுள்ளவாறு லேசான நுனி கொண்ட பிரஷ்ஷில் வெள்ளை பெயின்டை எடுத்துக் கொண்டு விநாயகரின் கண்பகுதி மீது இரண்டு புள்ளிகளும், துதிக்கையில் பட்டைக்கான மூன்று கோடுகளும் இட வேண்டும்.

ஸ்டெப் 14: இப்போது கண்களின் மீது வைக்கப்பட்ட வெள்ளை புள்ளிகளுக்கு நடுவில் கறுப்பு நிற பெயின்டில் இரண்டு சிறிய புள்ளிகளும், துதிக்கை பட்டையில் ஒரு சிவப்பு நிறப் புள்ளியும் வைக்க வேண்டும்.

ஸ்டெப் 15: மீண்டும் பிரஷ்ஷில் வெள்ளை பெயின்டை எடுத்து துதிக்கையின் மீது லேசான ஒரு கோடும், படத்தில் காட்டியுள்ளவாறு விநாயகரின் தொப்பையின் மீது லேசான ஒரு கோடாகப் பூணூலும் வரைய வேண்டும்.

ஸ்டெப் 16: அடுத்து விநாயகரின் கீரிடத்துக்கு தங்க நிற பெயின்ட் பூசி சிலையை சிறிது நேரம் காற்றில் உலர வைக்க வேண்டும்.

ஸ்டெப் 17: இறுதியாகக் கொட்டைப்பாக்குக்கு அடிப்பகுதியில் டபுள் கம் டேப்பை சிறிது வெட்டி ஓட்டினால் `கொட்டைப்பாக்கு விநாயகர்' ரெடி!

இவரை பூஜையறையில் வைத்து வழிபடலாம். விசேஷ நாள்களில் வீட்டுக்கு வருவோர்க்குத் தரக்கூடிய தாம் பூலத்தில் வைத்துக் கொடுக்கலாம். ஃப்ரிட்ஜ், கார், வீட்டின் கதவுகளிலும் அழகுக்காக ஒட்டிவைக்கலாம்.