Published:Updated:

கோவில்பட்டி: செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா... கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கொடியேற்றம்

கோவில்பட்டியில் பழைமை வாய்ந்த செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது.

கோவில்பட்டி: செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா... கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கோவில்பட்டியில் பழைமை வாய்ந்த செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது.

Published:Updated:
கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ளது அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயில். செண்பக மன்னனால் எழுப்பப்பட்ட இந்தக் கோயில் என்பதால் இத்தல இறைவிக்கு செண்பகவல்லி எனப் பெயர் சூட்டப்பட்டது. தென் மாவட்டத்தில் மதுரைக்கு அடுத்தபடியாக கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் அம்பாளே அரசாட்சி செய்கிறாள். 7 அடி உயரத்தில் எழில் கொஞ்சும் தோற்றத்துடன் அருள் பாலிக்கிறார் செண்பகவல்லி அம்பாள்.

உற்சவ மூர்த்திகள்
உற்சவ மூர்த்திகள்

இந்தக் கோயிலில் மட்டும் நின்ற கோலத்துடன் அருள்பாலிக்கும் அம்பிகையை அமர்ந்த கோலத்தில் அலங்காரம் செய்வது சிறப்பு. ‘சதுங்கன்’, ‘பதுமன்’ என்ற இரண்டு சர்ப்பத் தலைவர்கள் இத்தல இறைவனைப் பூவனப் பூக்களால் அர்ச்சித்ததால் இத்தல இறைவனுக்கு ‘பூவனநாதர்’ என்ற திருநாமம் பெற்றார். இறைவனும், இறைவியும் கிழக்கு பார்த்தபடி அருள்புரியம் சிவாலயங்களில் இத்தலமும் ஒன்று.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஈசனின் திருமணத்தின் போது வடபுறம் தாழ்ந்து தென்புறம் உயர்ந்த நிலையில், உலகை சமன் செய்யும் வகையில், இறைவனின் ஆணைப்படி அகத்தியர் பொதிகை மலை நோக்கிப் பயணித்தார். வழியில் எதிர்த்த அரக்கர்களான வாதாபி மற்றும் வில்வனன் ஆகியோரை வதைத்ததால், பிரம்மஹத்தி தோஷம் நீங்க களாவனத்தில் எழுந்தருளிய பூவனநாதரைப் பூஜித்து தோஷம் நீங்கப் பெற்றார்.

கொடியேற்றம்
கொடியேற்றம்

பொன்மலை முனிவர்களின் வேண்டுகோளினை ஏற்று அகத்தியர் ஏற்படுத்திய தீர்த்தமே இத்தலத்தில் அகத்திய தீர்த்தமாகப் போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனித் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு பங்குனித் திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி நடந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சுவாமி, அம்பாள், கொடி மரம், நந்தி பலிபீடம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இத்திருவிழா, இன்று தொடங்கி வரும் 15-ம் தேதிவரை தொடர்ந்து 11 நாள்கள் நடக்கிறது.

பக்தர்கள்
பக்தர்கள்

இவ்விழா நாள்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-ம் திருநாளான வரும் 13-ம் தேதி காலை 8 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடக்கிறது. 10-ம் திருநாளான வரும் 14-ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. 11-ம் திருநாளான 15-ம் தேதி இரவு தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism