Published:Updated:

கிரகண வேளை புண்ணியகாலம் என்றால் அப்போது ஏன் ஆலயங்கள் திறக்கக்கூடாது? - சாஸ்திரம் சொல்வது என்ன?

கிரகணம்

குறிப்பாக கிரகண காலங்களைப் புண்ணிய காலங்கள் என்று நம் முன்னோர் அழைத்தனர். அந்த வேளையில் செய்யும் ஜபம் மிகவும் மிகுந்த பலனைத் தரும் என்பது நம்பிக்கை. அதே வேளை வேறு எந்த வேலையிலும் ஈடுபடக் கூடாது என்றும் சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

கிரகண வேளை புண்ணியகாலம் என்றால் அப்போது ஏன் ஆலயங்கள் திறக்கக்கூடாது? - சாஸ்திரம் சொல்வது என்ன?

குறிப்பாக கிரகண காலங்களைப் புண்ணிய காலங்கள் என்று நம் முன்னோர் அழைத்தனர். அந்த வேளையில் செய்யும் ஜபம் மிகவும் மிகுந்த பலனைத் தரும் என்பது நம்பிக்கை. அதே வேளை வேறு எந்த வேலையிலும் ஈடுபடக் கூடாது என்றும் சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

Published:Updated:
கிரகணம்
சூரியன் சந்திரன் ஆகிய இரு கிரகங்களும் ராகு கேதுவோடு இணைந்து சஞ்சரிக்கும் நாளில் சந்திர சூரிய கிரகணங்கள் உண்டாகின்றன. பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் கிரகணங்கள் குறைந்தது இரண்டு முறை நிகழ்கின்றன. இந்த ஆண்டில் கடந்த அமாவாசையோடு சூரிய கிரகணம் ஏற்பட்டது. நாளை (8.11.2022) சூரியன் கேதுவோடு நிற்க சந்திரன் ராகுவோடு இணைந்து சஞ்சரிக்கும் பௌர்ணமி தினத்தில் சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது.

கிரகண வேளை குறித்தும் அப்போது கடைப்பிடிக்க வேண்டிய அனுஷ்டானங்கள் குறித்தும் நம் சாஸ்திரங்களிலும் ஜோதிட நூல்களிலும் விரிவாகப் பேசுகின்றன. சாஸ்திரப்படி இந்த வேளையில் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை என்பன குறித்த விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

ராகு கேது
ராகு கேது

குறிப்பாக கிரகண காலங்களைப் புண்ணிய காலங்கள் என்று நம் முன்னோர் அழைத்தனர். அந்த வேளையில் செய்யும் ஜபம் மிகவும் மிகுந்த பலனைத் தரும் என்பது நம்பிக்கை. அதே வேளை வேறு எந்த வேலையிலும் ஈடுபடக் கூடாது என்றும் சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. குறிப்பாக ஆலய வழிபாட்டையும் தவிர்க்க வேண்டிய நேரமாகவே அந்த நேரம் கருதப்படுகிறது. புண்ணிய காலம் என்று கருதப்படும் நேரத்தில் ஆலய வழிபாட்டைத் தவிர்ப்பது ஏன் என்பது குறித்த கேள்வி சிலர் மனத்துள் உள்ளது. இது குறித்து ஶ்ரீசேஷாத்ரிநாத சாஸ்திரிகளிடம் கேட்டோம்.

"கிரகண வேளை என்பது புண்ணிய காலம் என்றுதான் சாஸ்திரம் சொல்கிறது. இந்த வேளையில் இயற்கையை கவனித்தால் நமக்கு சில விஷயங்கள் விளங்கும். வெளியே இருள் சூழ்ந்துவிடும். பறவைகள் தம் கூட்டுக்குத் திரும்பிவிடும். நாமும் நம் வீட்டில் இருந்துவிடுகிறோம். கிரகண வேளையில் வெறுங்கண்ணால் சூரியனைப் பார்க்கக் கூடாது என்று அறிவியல் சொல்கிறது. காரணம் கதிர்வீச்சு என்கிறார்கள். அப்படிக் கதிர்வீச்சு நிறைந்திருக்கும் நேரத்தில் நாம் நம் வீட்டோடு இருக்க வேண்டும் வெளியே அலையக் கூடாது என்பதனால்தான் சாஸ்திரம் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

புண்ணிய காலமான கிரகண வேளையில் நம் புலன்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது. உணவுக்கட்டுப்பாடும் அவசியம். நம்முள் இருக்கும் மனம் மட்டுமே செயல்பட அனுமதிக்கலாம். அதுவும் இறைச் சிந்தனையில் மட்டுமே இருக்க வேண்டும். கோயிலுக்குச் சென்றால் அங்கே சும்மா இருக்க முடியாது. சேவைகள், வழிபாடுகள் ஆகியன நிகழ்த்த வேண்டியிருக்கும். அவற்றுக்காக நம் புலன்கள் பணி செய்ய வேண்டியிருக்கும். உணவுக் கட்டுப்பாடுகள் நிறைந்த நாளில் கோயில் வேலை என்றாலும் அது சோர்வு தரக்கூடிய ஒன்றுதான். கிரகண வேளையில் ஓரிடத்திலிருந்து நாம ஜபம் செய்வது, தர்ப்பணம் முதலிய புண்ணிய காரியங்கள் செய்வது என்று இருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் சொல்கின்றன. இவற்றைக் கடைப்பிடிக்கவே ஆலய நடையை சாத்தும் பழக்கம் தோன்றியது" என்று விளக்கினார்.

பெரும்பாலான ஆலயங்களில் நாளை நடை மூடியிருக்கும். சில கோயில்களில் கிரகண வேளை முடிந்ததும் தீர்த்தவாரி நடைபெறும். திருமலை திருப்பதியில் காலை 8 மணி முதல் மாலை 7.30 மணிவரை நடை சாத்தப்பட்டிருக்கும்.