Published:Updated:

மத்தியப் பிரதேசம்: ராமர் அசுரர்களை அழித்த மலைப்பகுதி; தாதுக்களை வெட்டி எடுக்க அரசு தடை!

சித்தா பஹத் மலைப்பகுதி

ராமர் தனது 14 ஆண்டுகால வனவாச காலத்தில் தங்கி இருந்ததாகக் கருதப்படும் மத்தியப் பிரதேச மலைப்பகுதியில் தாதுக்களை வெட்டி எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம்: ராமர் அசுரர்களை அழித்த மலைப்பகுதி; தாதுக்களை வெட்டி எடுக்க அரசு தடை!

ராமர் தனது 14 ஆண்டுகால வனவாச காலத்தில் தங்கி இருந்ததாகக் கருதப்படும் மத்தியப் பிரதேச மலைப்பகுதியில் தாதுக்களை வெட்டி எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
சித்தா பஹத் மலைப்பகுதி

மத்திய பிரதேச மாநிலம் சத்மா மாவட்டத்தில் சித்தா பஹத் வனப்பகுதியில் ராமர் தனது 14 ஆண்டு வனவாச காலத்தில் தங்கி இருந்து அசுரர்களை அழித்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன. அசுரர்கள் இந்த மலையில் தங்கி இருந்த முனிவர்களைக் கொன்று குவித்ததாகவும், அவ்வாறு கொலை செய்யப்பட்ட முனிவர்களின் சுவடுகள் இன்னும் மலைப்பகுதியில் காணப்படுவதாகவும் நம்பப்படுகிறது.

ராமர் தனது 14 ஆண்டுகால வனவாச காலத்தில் அரக்கர்களைக் கொன்று முனிவர்களைப் பாதுகாத்ததாக பக்தர்களால் நம்பப்படுகிறது. எனவே இம்மலையை ராமர் வாழ்ந்த மலைப்பகுதியாகக் கருதி அதனை ஆன்மிக சுற்றுலா மையமாக மேம்படுத்த மத்திய அரசிடம் மாநில அரசு ரூ.500 கோடி கேட்டுள்ளது. திடீரென இந்த மலையில் பாக்சைட் போன்ற தாதுக்கள் இருப்பதாகவும், அதனை வெட்டி எடுக்க மாவட்ட நிர்வாகம் டெண்டர் விடத் திட்டமிட்டு இருந்தது. இதற்காக இம்மாதம் 30-ம் தேதி பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

மத்தியப் பிரதேசம்: ராமர் அசுரர்களை அழித்த மலைப்பகுதி; தாதுக்களை வெட்டி எடுக்க அரசு தடை!

ராமர் வாழ்ந்த மலையில் தாதுக்களை வெட்டி எடுக்க முயன்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று முன்னாள் முதல்வர் கமல்நாத் எச்சரிக்கை விடுத்தார். கமல்நாத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து சித்தா பஹத் மலையில் எந்த வித சுரங்கப்பணிகளும் மேற்கொள்ளப்படாது என்று முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், சித்தா பஹத் மலைப்பகுதி எங்களின் நம்பிக்கையின் மையமாக இருக்கிறது. எனவே அதன் புனிதத்தன்மை தொடர்ந்து பாதுகாக்கப்படும். அங்கு எந்தவிதமான சுரங்கப்பணிகளும் மேற்கொள்ளப்படாது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்குத் தேவையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த மலைப்பகுதியில் தாதுக்களை வெட்டி எடுக்க பாஜகவிற்குள்ளேயே எதிர்ப்பு இருந்து வருகிறது. இது குறித்து மத்திய பிரதேச காங்கிரஸ் பிரமுகர் நரேந்திரா வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து மாநில அரசு தனது தவற்றை ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். சித்தா பஹத் மலைப்பகுதியில் ஆரண்ய காண்டத்தில் காட்டப்படும் நிகழ்வுகள் நடந்திருப்பதாக நம்பப்படுகிறது.