Published:Updated:

தமிழக அரசின் ஆடி மாத ஆன்மிகச் சுற்றுலா: மதுரையைச் சுற்றியுள்ள அம்மன் கோயில்களுக்கு ஒரு ட்ரிப்!

ராக்காயி அம்மன் கோயிலில்...

இந்த ஆன்மிகப் பயணத்துக்கு அனைத்து வசதிகளும் செய்து தர சுற்றுலாத்துறை சார்பாக ஒரு நபருக்கு ரூ.900 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தமிழக அரசின் ஆடி மாத ஆன்மிகச் சுற்றுலா: மதுரையைச் சுற்றியுள்ள அம்மன் கோயில்களுக்கு ஒரு ட்ரிப்!

இந்த ஆன்மிகப் பயணத்துக்கு அனைத்து வசதிகளும் செய்து தர சுற்றுலாத்துறை சார்பாக ஒரு நபருக்கு ரூ.900 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Published:Updated:
ராக்காயி அம்மன் கோயிலில்...

ஆடி மாதத்தை முன்னிட்டு மதுரையிலும் சுற்றியுள்ள ஊர்களிலும் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோயில்களுக்குப் பக்தர்கள் சென்று வரும் வகையில், ஆன்மிகச் சுற்றுலாவை இந்து சமய அறநிலையத்துறையும் சுற்றுலாத்துறையும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.

ஆன்மிக பயணம் வந்த பக்தர்கள்
ஆன்மிக பயணம் வந்த பக்தர்கள்

அம்மன் கோயில்களை தரிசிப்பதற்கான இந்த ஆன்மிகப் பயணம், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று பூஜை செய்துவிட்டு, அங்கிருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில், கொல்லங்குடி காளியம்மன் கோயில் என்று பயணம் தொடர்ந்தது.

பக்தர்களுக்கு மேள தாளத்துடன் வரவேற்பு
பக்தர்களுக்கு மேள தாளத்துடன் வரவேற்பு

அங்கிருந்து மீண்டும் மதுரைக்குத் திரும்பி, அழகர்மலையில் அமைந்துள்ள கள்ளழகர் கோயிலின் உபகோயிலான ராக்காயி அம்மன் திருக்கோயிலில் இந்த அன்மிகச் சுற்றுலா நிறைவடைந்தது.

இந்த யாத்திரையில் கலந்துகொண்ட அன்பர்களுக்கு, அழகர் கோயில் நிர்வாக அலுவலர் பிரதீபா தலைமையில் மேளதாளத்துடன் சிறப்பான மரியாதை அளித்து வரவேற்கப்பட்டு சிறப்பாக சாமி தரிசனம் செய்துவைக்கப்பட்டது.

புனித நீராடல்
புனித நீராடல்

வந்திருந்த பக்தர்களுக்கு ராக்காயி அம்மன் படம், கோயில் தல வரலாறு புத்தகம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. "இது அருமையான ஆன்மிகப் பயண அனுபவம்; மிகச் சிறப்பாக இருந்தது" என கலந்துகொண்ட பக்தர்கள் தெரிவித்தார்கள்.

இந்த ஆன்மிகப் பயணத்துக்கு அனைத்து வசதிகளும் செய்து தர சுற்றுலாத்துறை சார்பாக ஒரு நபருக்கு ரூ.900 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மதுரையில் உள்ளவர்கள் ஆடி மாதத்தில் முக்கியமான அம்மன் கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வர இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 91769 95841 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.