Published:Updated:

மதுரை: "அடுத்த ஆண்டாவது எங்களை நேரில் தரிசிக்கவை பதினெட்டாம்படி கருப்பா!"- மன்றாடும் பக்தர்கள்!

பதினெட்டாம்படி பூஜை
பதினெட்டாம்படி பூஜை

மாலை 6 மணிக்கு பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயிலில் கதவுகள் திறக்கப்பட்டன. பதினெட்டி படிகளும் பூக்கள், பழங்களால் அலங்கரிப்பட்டிருந்தன. தீபம் ஏற்றப்பட்டு 5 நிமிடத்தில் கதவுகள் மூடப்பட்டன.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாததால் தென்மாவட்ட மக்கள் அதிகளவில் பங்கு கொள்ளும் மதுரை கள்ளழகர் கோயில் ஆடி பெருந்திருவிழா, 2-வது ஆண்டாக கோயில் வளாகத்துக்குள் மட்டும் நடந்து முடிந்துள்ளது.

பதினெட்டாம்படி கதவுகளுக்கு பூஜை
பதினெட்டாம்படி கதவுகளுக்கு பூஜை

அழகர் கோயிலில் சித்திரைத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் மற்றொரு விழா ஆடிப்பெருந்திருவிழாவாகும்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் கடந்த வருடம் போல் இவ்வருடமும் தேரோட்டம் மற்றும் ஆடிப் பௌர்ணமி பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் படிபூஜை, கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சிகள் மக்கள் பங்கேற்பு இல்லாமல், அதே நேரம் மரபுப்படி நடந்து முடிந்தன.

ஆடிப் பௌர்னமிக்கு மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வண்டி கட்டிக்கொண்டு அழகர் கோயிலுக்கு வந்து தங்கியிருந்து பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்குக் கிடாவெட்டிப் பொங்கல் வைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள். மக்கள் கூட்டத்தால் அழகர் கோயில் வட்டாரமே 'ஜேஜே' என்றிருக்கும்.

இந்தாண்டு கட்டுப்பாடுகளால் மிக சொற்பமானவர்களே வந்து நேர்த்திக்கடனை முடித்தார்கள். அதிலும் ஆடிப் பௌர்ணமி அன்று மதியத்துக்கு மேல் கோயில் வளாகத்துக்குள் பொது மக்களை அனுமதிக்கவில்லை.

பதினெட்டாம்படி பூஜை
பதினெட்டாம்படி பூஜை

கோயில் உட்பிரகாரத்தில் பூப்பல்லாக்கில் எழுந்தருளிய கள்ளழகர் சுந்தரராஜபெருமாளுக்கு வழக்கமான சிறப்பு பூஜைகள் நடந்தன.

மாலை 6 மணிக்கு பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயிலில் கதவுகள் திறக்கப்பட்டன. பதினெட்டி படிகளும் பூக்கள், பழங்களால் அலங்கரிப்பட்டிருந்தன. தீபம் ஏற்றப்பட்டு 5 நிமிடத்தில் கதவுகள் மூடப்பட்டன.

தூத்துக்குடி பனிமய மாதா   திருவிழா - வரலாற்றில் 2ம் முறையாக மக்கள் பங்கேற்பின்றி நடந்த கொடியேற்றம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பின் கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஆண்டுதோறும் ஆடி பௌர்னமிக்கும், அமாவாசைக்கு மட்டும்தான் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் கதவுகள் திறக்கப்படும். அதை நேரில் காண முடியாத பக்தர்கள் கோட்டை வாசலுக்கு வெளியே நின்றுகொண்டு "அடுத்த ஆண்டாவது எங்களை நேரில் தரிசிக்க வை பதினெட்டாம்படி கருப்பா..." என்று வேண்டிக்கொண்டார்கள்.

கதவுகளுக்கு சந்தனம் சாத்து பூஜை
கதவுகளுக்கு சந்தனம் சாத்து பூஜை

நேரில் வருவதற்கு அனுமதி இல்லாவிட்டாலும் இப்புனித நிகழ்ச்சியை பக்தர்கள் காண வேண்டும் என்பதற்காகக் கோயில் நிர்வாகம் சார்பில் யூடியூப் தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஊடகங்களும் நேரடி ஒளிபரப்பு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் அனிதா சிறப்பாகச் செய்திருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு