Published:Updated:

மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்... களைகட்டிய மதுரை மாநகரம்!

சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா இரண்டு வருடங்கள் மக்கள் பங்களிப்பு இல்லாமல் கோயில் வளாகத்துக்குள்ளேயே நடந்தது. இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்... களைகட்டிய மதுரை மாநகரம்!

சித்திரைத் திருவிழா இரண்டு வருடங்கள் மக்கள் பங்களிப்பு இல்லாமல் கோயில் வளாகத்துக்குள்ளேயே நடந்தது. இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
சித்திரைத் திருவிழா
இரண்டு வருடங்களுக்குப்பின் பக்தர்கள் கலந்துகொண்ட சித்திரைத் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி இன்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வெகு சிறப்பாக நடந்தது.
சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

நாள்தோறும் விழாக்களால் நிறைந்து, மக்கள் மகிழ்ந்திருக்கும் மதுரை மாநகரில் மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தமானது. இதையொட்டி மதுரை மக்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழ்ந்துகொண்டிருக்கும் மீனாட்சியின் பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

10 நாள்கள் உற்சாகமாக நடைபெறும் மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவைத் தொடர்ந்து கள்ளழகர் திருவிழா தொடங்கும்.

கொடியேற்றம்
கொடியேற்றம்

கொரோனா கட்டுப்பாட்டால் இரண்டு வருடங்கள் மக்கள் பங்களிப்பு இல்லாமல் இவ்விழாக்கள் கோயில் வளாகத்துக்குள்ளேயே நடந்தன. இந்நிலையில் இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம் எனத் திருவிழாவுக்கான அறிவிப்பு கடந்த மாதம் கோயில் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் மக்கள் உற்சாகமானர்கள். இதை முன்னிட்டு நகரில் திருவிழாவைச் சார்ந்த அனைத்து வியாபாரங்களும் வேகமெடுத்துள்ளன.

இன்று காலை 10.30க்கு மங்கல வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் உற்சாகக் குரல் ஒலிக்க சுவாமி சந்நிதியில் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதற்கான சிறப்புப் பூஜையில் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், அறநிலையத்துறை அலுவலர்கள், மாநகராட்சி, காவல்துறை உயரதிகாரிகளுடன் பொதுமக்களும் கலந்துகொண்டார்கள்.

மீனாட்சியம்மன் கோயில்
மீனாட்சியம்மன் கோயில்
என்.ஜி.மணிகண்டன்

வருகின்ற 14-ம் தேதி சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதன் பிறகு தேரோட்டம், தீர்த்தவாரி என 16-ம் தேதி திருவிழா நிறைவுபெறும்.

அதைத்தொடர்ந்து கள்ளழகர் கோயில் திருவிழா நடைபெறும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism