Published:Updated:

மதுரை: பச்சைப் பட்டுடுத்தி செயற்கை வைகையாற்றில் இறங்கி அருள்பாலித்த கள்ளழகர்!

தங்கக்குதிரையில் கள்ளழகர்
தங்கக்குதிரையில் கள்ளழகர்

மக்கள் பங்கேற்பு இல்லாமல், மண்டகப்படி வரவேற்பு இல்லாமல் பாரம்பரிய முறைப்படி நடந்த இந்நிகழ்வை உலகம் முழுவதுமுள்ள ஆன்மிக மக்கள் இணையதளம் மூலம் கண்டு வணங்கினார்கள்.

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் நடந்து முடிந்தது.
தங்க்கக்குதிரையில் கள்ளழகர்
தங்க்கக்குதிரையில் கள்ளழகர்

கோயில் வளாகத்தில் செயற்கை வைகையாற்றில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வை பொதுமக்கள் இணையதளம் மூலம் கண்டு பக்தி பரவசமடைந்தனர்.

கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக இந்தாண்டும் மதுரையில் நடைபெறும் சித்திரைத்திருவிழா மக்கள் பங்கேற்பு இல்லாமல் நடந்து வருகிறது.

கள்ளழகர் திருவிழா
கள்ளழகர் திருவிழா

தமிழகத்தில் முக்கிய திருவிழாவான மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத்திருவிழாவில் குடியேற்றம், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் அனைத்தும் கோயில் வளாகத்தில் மக்கள் பங்கேற்பு இல்லாமல் அதே நேரம் பாரம்பரிய முறைப்படி சிறப்பாக நடைபெற்றது.

சித்திரைத்திருவிழாவின் தொடர்ச்சியாக அழகர்மலையில் வீற்றிருக்கும் கள்ளழகரான சுந்தரராஜப்பெருமாள் மதுரைக்கு வருகை தந்து வைகையாற்றில் எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, அரசின் கட்டுப்பாட்டால் இன்று காலை அழகர்கோயில் வளாகத்திலயே நடந்து முடிந்தது.

கள்ளழகர் கோயில்
கள்ளழகர் கோயில்

கோயிலில் செயற்கையாக அமைக்கப்பட்ட வைகை ஆற்றில் சிறப்பு பூஜைகளுக்குப்பின் கள்ளழகர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் தங்கக் குதிரையில் பச்சை பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார்.

மக்கள் பங்கேற்பு இல்லாமல், மண்டகப்படி வரவேற்பு இல்லாமல் பாரம்பரிய முறைப்படி நடந்த இந்நிகழ்வை உலகம் முழுவதுமுள்ள ஆன்மிக மக்கள் இணையதளம் மூலம் கண்டு வணங்கினார்கள்.

கள்ளழகர்
கள்ளழகர்

அரசு என்னதான் கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் கள்ளழகர் திருவிழாவுக்காக நேர்த்திக் கடன் வைத்து விரதமிருந்த மக்கள் மதுரையிலுள்ள வைகை ஆற்றுக்கு வருகை தந்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள்.

அடுத்த கட்டுரைக்கு