Published:Updated:

மதுரை: சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலை... மக்களை மகிழ்விக்கும் அஷ்டமி சப்பர விழா!

அஷ்டமி சப்பரத்தில் அம்பாள்
News
அஷ்டமி சப்பரத்தில் அம்பாள்

மார்கழி மாதத் தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும் அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளந்து உலா வருவது வழக்கம்.

மீனாட்சி - சுந்தரேசுவரர் அருள்பாலிக்கும் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் மாசி வீதிகள் நாளெல்லாம் திருவிழாக்களால் களைகட்டும்.

அந்த வகையில் இந்தாண்டு மார்கழி மாதத்தில், உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படி அளக்கும் லீலை, அஷ்டமி சப்பரத்திருவிழாவாக நடைபெற்றது.

சப்பர தேரோட்டம்
சப்பர தேரோட்டம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சார்பாக நடைபெறும் விழாக்களில் அஷ்டமி சப்பர விழா முக்கியமானது.

மார்கழி மாதத் தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும் அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளந்து உலா வருவது வழக்கம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்று அதிகாலை கோயிலிலிருந்து சுவாமி - அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு வெளி வீதியில் வலம் வந்து, அங்கிருந்த சப்பரத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் வீதியுலா வந்தார்கள். இதில் அம்மன் சப்பரத்தை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும்.

சப்பர உலா
சப்பர உலா

நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்த சப்பரத்தை ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கீழே சிதறிக்கிடந்த அரிசியை வந்திருக்கும் பக்தர்கள் எடுத்துக் கொள்வார்கள். திருவிழாவில் எடுக்கப்பட்ட அரிசியை வீட்டில் வைத்து வேண்டினால், பசிப்பிணி ஒழியும் என்பது நம்பிக்கை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவபெருமானும், உமாதேவியாரும் ஏகாந்தமாயிருந்த தருணத்தில், ‘இவ்வுலகில் தோன்றிய உயிர்கள் இறக்கும்வரை துன்பத்திற்கும், பாவத்திற்கும் ஆளாகும் நிலை மாற வழியில்லையா? பிறப்பு, இறப்பின்றி முக்தி அடையவும், பாவங்கள் நீங்கவும் ஒரு வழி சொல்லுங்கள்’ என்று தேவி கவலையுடன் கேட்க, மதுரையின் சிறப்பை எடுத்துக் கூறியதோடு அஷ்டமி பிரதட்சிணம் பற்றியும், மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சிணம் செய்வோர்க்குத் துன்பம் நீங்கி முக்தி கிடைப்பது உறுதி என்றும் இறைவன் சிவன் கூறினார்.

சப்பரத்தில் அம்பாள்
சப்பரத்தில் அம்பாள்

இந்த அடிப்படையிலயே அஷ்டமி சப்பர தேரோட்ட விழா மதுரையில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.