Published:Updated:

2K கிட்ஸ்: நிறம், மணம், நிறைவு... மதுரை மீனாட்சி தாழம்பூ குங்குமம்!

மதுரை மீனாட்சி தாழம்பூ குங்குமம்
பிரீமியம் ஸ்டோரி
மதுரை மீனாட்சி தாழம்பூ குங்குமம்

பவானி பால்பாண்டி

2K கிட்ஸ்: நிறம், மணம், நிறைவு... மதுரை மீனாட்சி தாழம்பூ குங்குமம்!

பவானி பால்பாண்டி

Published:Updated:
மதுரை மீனாட்சி தாழம்பூ குங்குமம்
பிரீமியம் ஸ்டோரி
மதுரை மீனாட்சி தாழம்பூ குங்குமம்

மதுரை, மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்புகளில் ஒன்று, தாழம்பூ குங்குமம். ஆயிரம் கால் மண்டப ஆச்சர்யம், பொற்றாமரை குள அழகு, மீனாட்சியின் அருள் என்று மனம் நிறையும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கோயிலிலிருந்து மறக்காமல் வாங்கிச் செல்வது, அடர் சிவப்பு நிறத்தில், மயக்கும் மணத்தில் இருக்கும் தாழம்பூ குங்குமம்.

தாழம்பூ குங்குமம் பற்றிச் சொல்வதற்கு முன்னர், தாழம்பூ பற்றிய ஒரு புராணக் கதை. பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி வந்தது. அப்போது சிவபெருமான், யார் தன்னுடைய அடி, முடியைக் கண்டு வருகிறார்களோ அவரே பெரியவர் என்று கூறினார். ஆனால் அடி, முடி காண முடியாதபடி சிவன் விஸ்வ ரூப மெடுக்க, பிரம்மன் அன்னப்பறவையாக மாறி முடியைக் காணவும், விஷ்ணு வராக வடிவம் கொண்டு அடியைக் காணவும் விரைந்தனர். ஆனாலும், பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இருவராலும் அடியையோ, முடியையோ காண முடியவில்லை.

2K கிட்ஸ்: நிறம், மணம், நிறைவு... மதுரை மீனாட்சி தாழம்பூ குங்குமம்!

அப்போது பிரம்மன், சிவனின் தலையி லிருந்து கீழே விழுந்துகொண்டிருந்த தாழம்பூ விடம், ‘நான் மேலே வந்து சிவனின் முடியைக் கண்டதாக நீ சாட்சி சொல்’ என்று சொல்ல, தாழம்பூவும் அப்படியே பொய் சாட்சி சொன்னது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், தாழம்பூவை தன் பூஜையில் இனி ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனச் சாபம் கொடுத்தார். தாழம்பூ சிவபெருமானை வேண்டி தவமிருக்க, சிவராத்திரி அன்று மட்டும் தாழம்பூவை ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார் சிவபெருமான். எனவே, சிவ ராத்திரியன்று மட்டும் சிவனுக்குத் தாழம்பூ அலங்காரம் செய்யப்படுகிறது.

சரி... இப்போது தாழம்பூ குங்குமத்துக்கு வருவோம். சிவனுக்கு சிவராத்திரிக்கு மட்டுமே தாழம்பூ என்றால், மதுரை மீனாட்சிக்கு தினமும் தாழம்பூ குங்கும அர்ச்சனை செய்யப்படுகிறது. மேலும், பக்தர்களுக்கும் கோயிலில் இந்தக் குங்குமமே மங்கலப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தினர், கோயிலுக்குள் தினமும் இயற்கை முறையில் தாழம்பூ குங்குமத்தைத் தயாரிக்கின்றனர்.

‘‘விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், படிகாரம், வெங்காரம் எல்லாம் சேர்த்து அரைச்சு, அதோட கொஞ்சம் நல்லெண்ணெய், தாழம்பூ தைலம் சேர்ப்போம். மஞ்சள் வாசனையும் தாழம்பூ வாசனையும் சேரும்போது, மயக்குற அளவுக்கு ஒரு மணத்துல குங்குமம் தயாராகும். அதை விற்பனைக் காக பாக்கெட் போடுவோம். அந்தந்த நாள்ல செய்யுற குங்குமம் அன்னன் னைக்கே விற்பனை ஆகிடும். கோயி லுக்கு வர்றவங்கள்ல பெரும்பாலான வங்க தவறாம தாழம்பூ குங்குமம் வாங்கிட்டுப் போயிடுவாங்க. விசேஷ தினங்கள், திருவிழா அப்போவெல்லாம் விற்பனை பல மடங்காகிடும்’’ என்கின்ற னர் தாழம்பூ குங்குமம் தயாரிப்பவர்கள்.

2K கிட்ஸ்: நிறம், மணம், நிறைவு... மதுரை மீனாட்சி தாழம்பூ குங்குமம்!

அம்மன் சந்நிதியில் 15 வருடங் களாகக் கடை வைத்திருக்கும் கண்ணன், ‘‘ஒரிஜினல் தாழம்பூ குங்குமமானு பரிசோதிக்க ஒரு முறை இருக்கு. ஒரு வெள்ளை பேப்பர்ல குங்குமத்தை வெச்சு கொஞ்சம் தேய்ச்சா, பேப்பர்ல மஞ்சள் கலர் படிஞ்சிருக்கும்’’ என்றவர், ‘`இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, பச்சைனு பல நிறங்கள்ல குங்குமம் இருக்கு. ஆனாலும், மெரூன் கலர்ல இருக்குற தாழம்பூ குங்குமத்தோட அழகே தனிதான். பெண்ணோ, ஆணோ, துளி எடுத்து நெத்தியில வெச்சுக்கிட்டா தெய்விகக் களை வந்துடும். அதுமட்டுமல்லாம அதோட மணம் ஆன்மாவுக்கும் ஒரு புத்துணர்வைக் கொடுக்கும்’’ என்றார்.

தெற்கு கோபுரம் வாசலில் குங்குமம், தாலிச் சரடு விற்றுவரும் சுப்புலட்சுமி பாட்டி, ‘`எனக்கு 60 வயசு ஆகுது. கோயிலுக்கு வர்றவங்க குங்குமம் வாங்கிட்டுப் போறது ஒரு பக்கம்னா, இந்தக் குங்குமம் வாங்குறதுக் காகவே இங்க வர்றவுங்களும் இருக்காங்க. அந்தளவுக்கு பலருக்கும் குங்குமம்னாலே தாழம்பூ குங்குமம்தான்னு பயன்படுத்திப் பழகிடுச்சு’’ என்றார்.

2K கிட்ஸ்: நிறம், மணம், நிறைவு... மதுரை மீனாட்சி தாழம்பூ குங்குமம்!

கோயிலுக்கு எதிரில் உள்ள புதுமண்டபத்தில் 40 வருடங்களாகக் கடை வைத்திருக்கும் நாகேந்திர கண்ணன், ‘`என் தாத்தா, அப்பா, இப்ப நான்னு மூணு தலைமுறையா இங்க இந்தத் தாழம்பூ குங்குமக் கடையக் கொண்டு போய்ட்டு இருக்கோம். மத்த குங்குமத்தைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது சிலருக்கு அலர்ஜி ஆகலாம். ஆனா, தாழம்பூ குங்குமத் துல அப்படி எதுவுமே ஆகாது. எல்லா விசேஷங் களுக்கும் தாழம்பூ குங்குமம்தான் வேணும்னு பலர் கேட்டு வாங்கிட்டுப் போவாங்க’’ என்றவர், கொஞ்சம் குங்குமத்தை எடுத்து நம் உள்ளங்கையில் வைத்தார்.

அந்த அடர் சிவப்பு நிறத்துக்கும் மணத்துக்கும் யாராலும் மயங்காமல் இருக்க முடியாது.