Published:Updated:

`வெண்ணெய் வீசுதலுக்குத் தடை!' மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் திருவிழா கட்டுப்பாடுகள் #Corona

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில்
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில்

`மன்னார்குடி ராஜகோபால சுவாமிக்குப் பட்டு அஸ்திரம் மற்றும் மாலை சாற்றுதல் உள்ளிட்டவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்'.

கொரோனா வைரஸ் தாக்குதல் சீனா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்திருக்கிறது.

மன்னார்குடி
மன்னார்குடி

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெறவுள்ள திருவிழாவில் வழக்கமாக நடைபெறும் பல்வேறு சம்பிரதாயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில் தெப்பத் திருவிழா மார்ச் 30-ம் தேதி நடைபெறுகிறது. அடுத்த 10 நாள்களுக்கு விடையாற்றி விழாவும் இதன் நிறைவாக, ஏப்ரல் 12-ம் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், அரசு அதிகாரிகளும் பக்தர்களும் கலந்து கொண்டார்கள். கொரோனா முன்னெச்சரிக்கையாக, பல்வேறு சம்பிரதாயங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்கள், `ராஜகோபால சுவாமிக்குப் பட்டு அஸ்திரம் மற்றும் மாலை சாற்றுதல் உள்ளிட்டவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

CoronaUpdates: இந்தியாவின் இளைய கொரோனா பாதிப்பாளர்... நலம்பெறுகிறது 3 வயது குழந்தை!

தெப்பத் திருவிழாவுக்கு முதல் நாள் நடைபெறக்கூடிய வெண்ணெய் தாழி உற்சவத்தின்போது, சுவாமி மீது பக்தர்கள் வெண்ணெய் வீசி வழிபடுவதை தவிர்க்க வேண்டும். இவ்விழாவின்போது அதிகளவில் மக்கள் ஒன்றாகக் கூடுவதை தவிர்க்கும் விதமாக, கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கை, ஊர்வலம் போன்றவற்றை நடத்துவதற்கும் தடை விதக்கப்பட்டுள்ளது. அன்னதானம், நீர்மோர் வழங்குவதையும் பக்தர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்' எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு