Published:Updated:

மும்பையில் மார்கழி மகோத்சவம்: ஒரே மேடையில் 50 இசைக்கலைஞர்கள் நிகழ்த்திய தியாகராஜர் ஆராதனை

மும்பையில் இசைநிகழ்ச்சி
News
மும்பையில் இசைநிகழ்ச்சி

மும்பையில் ஒரே மேடையில் 50 இசைக்கலைஞர்கள் கூடி தியாகராயருக்கு இசை ஆராதனை செய்தனர்.

மும்பையில் மார்கழி மகோத்சவம்: ஒரே மேடையில் 50 இசைக்கலைஞர்கள் நிகழ்த்திய தியாகராஜர் ஆராதனை

மும்பையில் ஒரே மேடையில் 50 இசைக்கலைஞர்கள் கூடி தியாகராயருக்கு இசை ஆராதனை செய்தனர்.

Published:Updated:
மும்பையில் இசைநிகழ்ச்சி
News
மும்பையில் இசைநிகழ்ச்சி
மார்கழி மாதம் என்றாலே எங்கும் இசை களைகட்ட ஆரம்பித்துவிடும். தமிழகம் மட்டுமல்லாது மும்பையிலும் மார்கழி மாதத்தில் கர்நாடக இசைக்கச்சேரி நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் மும்பை கிங் சர்க்கிள் பகுதியில் இருக்கும் சண்முகானந்தா சந்திரசேகர சரஸ்வதி ஆடிட்டோரியத்தில் நேற்று (11.1.23) இரவு மார்கழி மகோத்சவ இசை நிகழ்ச்சி நடந்தது.

தியாகராஜ சுவாமிகளின் 176-வது ஆராதனை நிகழ்ச்சியாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மிருதங்கம், வீணை, வயலின், கடம் போன்ற இசைக்கருவிகளுடன் 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒருங்கிணைந்து இசைத்தனர்.

கணேஷ், குமரேஷ்
கணேஷ், குமரேஷ்

ஒவ்வோர் ஆண்டும் சங்கீத மும்மூர்த்திகளில் முதல்வரான தியாகராஜரின் ஆராதனை நிகழ்ச்சி பகுளபஞ்சமி நாளில் நாடு முழுவதும் கொண்டாடப்படும். அவர் பிறந்த ஊரான திருவையாரில் உலகெங்கும் இருந்து சங்கீதக் கலைஞர்கள் கலந்துகொண்டு தியாகராஜரின் கீர்த்தனைகளை இசைத்து வழிபடுவர். அதேபோன்று பல ஊர்களிலும் இசைக்கலைஞர்கள் கூடி வழிபாடுகள் செய்வர்.

மும்பையிலும் அத்தகைய நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. சமீபகாலமாக மும்பையில் மாலை 5 மணிக்கே குளிர் ஆரம்பித்து விடுகிறது. அந்தக் குளிரையும் பொருட்படுத்தாது ஏராளமானோர் வந்து இசை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியின் போது சிவபெருமானுக்கு ருத்ராபிஷேக பூஜையும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. இந்த ஆராதனையில் இசைக்கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி இசை ஆராதனை செய்தனர்.

இதே போன்று இந்த வாரத்தில் மும்பை பாந்த்ரா பகுதியில் இரண்டு நாள் மார்கழி மகோத்சவம் நடைபெற்றது. இதில் அம்ரிதா முரளி, அக்கரை சகோதரிகள், ஸ்ரீராம், வித்யா ஹரிகிருஷ்ணா, ரமணா பாலச்சந்திரன், வித்வான் விக்கு விநாயக்ராம் (கதம்), கணேஷ், குமரேஷ்(வயலின்) உட்பட பலர் கலந்து இரண்டு நாள்களும் இசை மழை பொழிந்தனர். இதற்கு பேன்யன் ட்ரீ இயக்குனர் நந்தினி மகேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.