Published:Updated:

கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியா, 4 பேருக்கு புனிதர் பட்டம்!

கத்தோலிக்க திருச்சபையில் ஒருவரை புனிதராக அங்கீகரிக்க வேண்டுமென்றால், அவர் அற்புதங்கள் செய்திருக்க வேண்டும். மரியம் திரேசா சிரமெல் மீது நம்பிக்கை வைத்து ஜெபம் செய்தவர்களது வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டன.

மரியம் திரேசியா
மரியம் திரேசியா

கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியா சிரமெல் உள்ளிட்ட 5 பேரை போப் பிரான்சிஸ், புனிதராக அறிவித்துள்ளார். இதற்கான விழா, வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Pope Francis
Pope Francis
pixabay

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புத்தன்சிராவைச் சேர்ந்த மரியம் திரேசியா சிரமெல், 1876-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ம் தேதி பிறந்தார். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தையுடன் பிறந்தவர்கள், ஏழு பெண்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து கொடுக்க அதிக வரதட்சணை கொடுத்ததனால் இவரது குடும்பம் ஏழ்மையானது. முதலில் செல்வச் செழிப்புடன் இருந்த இவர்களது குடும்பம், ஏழ்மையில் வாடியதையடுத்து மனம் உடைந்த தோமா, குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.

Vikatan

ஆனால், இவரது தாய் மிகுந்த பக்தியுள்ளவர் என்பதால், சிரமெல் உள்பட அவருடன் பிறந்த இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகளை இறை பக்தியுள்ள குழந்தைகளாக வளர்த்தார். அம்மாவைப்போலவே சிரமெல்லும் பக்தியில் அதிக ஈடுபாட்டுடன் இருந்தார். தினமும் தவறாமல் ஜெபம் செய்தார். இந்நிலையில், சிரமெல்லுக்கு 12 வயதாகும்போது அவரது தாய் இறந்துவிட்டதால் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார். ஆனாலும், ஜெபம் செய்வதை மட்டும் சிரமெல் விடவில்லை.

Mariam thresia
Mariam thresia

ஒருநாள் ஜெபம் செய்துகொண்டிருக்கும்போது, தன்னைக் கடவுள் அழைப்பதை உணர்ந்தார். அதையடுத்து, இவர் உருவாக்கிய ஹோலி ஃபேமிலி (Holy Family) என்ற திருச்சபையில் 1500-க்கும் மேற்பட்ட கன்னியாஸ்திரிகள் உள்ளனர். கேரளா மட்டுமல்லாமல் வட இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, கானா ஆகிய நாடுகளிலும் இவர்கள் பணியாற்றுகின்றனர். கத்தோலிக்க திருச்சபையில் ஒருவரைப் புனிதராக அங்கீகரிக்க வேண்டுமென்றால், அவர் அற்புதங்கள் செய்திருக்க வேண்டும். சிரமெல் மீது நம்பிக்கை வைத்து ஜெபம் செய்தவர்களது வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டன.

அற்புதங்கள் பல நிகழ்த்திய இவருக்கு 1999-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந்தேதி `வணக்கத்துக்குரியவர்' என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. 2000-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி, `அருளாளர்' பட்டம் வழங்கப்பட்டது.

Mariam thresia
Mariam thresia

அப்போதைய போப் ஆண்டவரான திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், இந்த இரண்டு பட்டங்களையும் வழங்கினார். நேற்று (13-ம் தேதி) மரியம் திரேசியா சிரமெல் புனிதராக அறிவிக்கப்பட்டார்.