Published:Updated:

வீடு, நிலம், சொத்து தொடர்பான பிரச்னைகள் நீக்கும் பெரமண்டூர் வராகர் வழிபாடு

மார்கழிக் கொண்டட்டம்
மார்கழிக் கொண்டட்டம்

சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் “நல்லியக் கோடன்” என்னும் குறுநில மன்னன் இத்தல எம்பெருமானை வணங்கிப் பல பேறுகள் பெற்றுள்ளான். மகேந்திர பல்லவன் எம்பெருமானின் திருவுளப்படி செங்கல் தளியாக இருந்த இத்திருக்கோயிலை கற்றளியாக மாற்றினான்.

தர்மத்துக்கு இடையூறு நேர்ந்தபோதெல்லாம் அவதாரம் எடுத்து அதை நிலைநாட்டியவர் ஸ்ரீவிஷ்ணு. அப்படி ஒருமுறை பூமிக்கும் அதைத் தாங்கும் பூதேவிக்கும் இடையூறு வந்தபோது ஸ்ரீவரகராக அவதரித்துக் காத்த திருத்தலம் பெரமண்டூர். பூமியை இம்சித்த இரண்யாட்சனை சம்ஹாரம் செய்து பூமியை மீட்டார் வராகப் பெருமான். அப்போது உக்கிரமான வராக மூர்த்தியை சாந்தப்படுத்த எண்ணிய முனிவர்களும் ரிஷிகளும் மண்டியிட்டு அவருக்கு முன்பாகத் தொழுது வழிபட்டார்கள். அவர்களால் மனம் குளிர்ந்த ஸ்ரீவராகர் பூதேவி சமேதராகக் காட்சி அருளினார்.

விகடன் வாசகர்கள் சிறப்பு வழிபாட்டு ஏற்பாடுகளை இன்று காலை 10 மணி முதல் நேரலையில் கீழ்க்கண்ட வீடியோ இணைப்பில் தரிசிக்கலாம்.

பூமியைக் காத்த வராக மூர்த்திக் கருணைக் கடலாகக் காட்சி அருளிய இடம்தான் விழுப்புரம் மாவட்டம் - திண்டிவனத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவிலுள்ள பெருமண்டியூர் திருத்தலம். முனிவர்களும் ரிஷிகளும் மண்டியிட்டு ஸ்ரீவராகரை வழிபட்டதால் இந்தத் தலத்துக்கு, 'பெருமண்டியூர்' என்ற பெயர் ஏற்பட்டது. பிறகு அந்தப் பெயர் மருவி 'பெரமண்டூர்' என்று அழைக்கப்படுகிறது. ஆதி வராகா், பிரளய வராகா, யக்ஞவராகா்ஆகிய மூன்று வராக மூர்த்தங்களின் ஒரே அம்சமானவர் இந்த பெரமண்டூர் வராகர். கோயிலின் கருவறையில் ஏழடி உயரத்தில் எழில் ரூபத்தில் சேவை சாதிக்கும் எம்பெருமானின் பேரழகினைக் காண இரு கண்கள் போதாது எனலாம். ஆதிசேஷன் மீது ஒரு திருவடியும் பூமியில் ஒரு திருவடியும் வைத்த கோலத்தில் பூதேவியை மடியில் இருத்திய திருக்கோலத்தில் காட்சி தருகிறார் வராகர். தாயார் அம்புஜவல்லி தாயார் என்ற திருப்பெயரில் தனிச் சந்நிதிகொண்டிருக்கிறார். வராகரால் பூரண தேஜஸ் பெற்ற பெற்ற சூரிய பகவான் பெரமண்டூா் திருத்தலத்தில் மாசி மாதம் முதல் வாரத்தில் தனது ஒளிக்கதிா்களால் ஶ்ரீவராகப் பெருமானை வழிபாடு செய்வது கிடைத்தற்கரிய தரிசனமாகும்.

சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் 'நல்லியக் கோடன்' என்னும் குறுநில மன்னன் இத்தல எம்பெருமானை வணங்கிப் பல பேறுகள் பெற்றுள்ளான் என்பதையம், மகேந்திர பல்லவன் எம்பெருமானின் திருவுளப்படி செங்கல் தளியாக இருந்த இத்திருக்கோயிலை கற்றளியாக மாற்றித் திருப்பணிகள் செய்து மகிழ்ந்துள்ளான் என்றும் கோயில் வரலாறு கூறுகின்றது.

வராகர் தரிசனம்
வராகர் தரிசனம்

வளமான வாழ்வளிக்கும் ஶ்ரீவராகப் பெருமானின் இத்திருக்கோயில் சக்தி வாய்ந்த பரிகாரத் தலமாகவும் திகழ்கின்றது. புதியதாக வீடுகட்ட ஆரம்பிக்கும் அன்பா்கள் எம்பெருமானின் திருச்சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தபின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கலாம். திருமணத் தடை ஏற்பட்டுள்ள அன்பா்கள் ‘திருவிடந்தை’ திருத்தலத்தில் பூஜைகள் செய்து வழிபாடுகள் செய்வதைப் போன்று பெரமண்டூா் ஶ்ரீஆதிவராகப் பெருமான் திருத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்யத் தடைகள் நீங்கி விரைவில் மணப்பேறு வாய்க்கப் பெறுவா். கொடிய நோய்கள் விலகவும், திருஷ்டி தோஷங்கள் நீங்கவும் இத்திருத்தல வராக மூா்த்தியை வழிபாடு செய்வது உத்தமம். மேலும் இந்தத் தலத்துக்குத் தொடர்ந்து ஐந்து சனிக்கிழமைகள் வந்து நெய்தீபம் ஏற்றி ஆதிவராக பெருமாளை வழிபட்டால், காரியத் தடைகள் விலகும். பூமியை மீட்ட ஆதிவராக மூர்த்தியை அர்ச்சனை செய்து வழிபட்டால், நிலம் தொடர்பான பிரச்னைகள் நீங்கும் என்பதும் ஐதிகம்.

மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான ஸ்ரீவராகர் தோன்றிய பெரமண்டூர் திருத்தலம் திண்டிவனத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. திண்டிவனம்− திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தை அடுத்த ஜக்காம் பேட்டை என்ற ஊரிலிருந்து சிங்கனூா் வழியாக பெரமண்டூா் திருத்தலத்தை அடையலாம்.

பெரமண்டூர் ஆதிவராகர்
பெரமண்டூர் ஆதிவராகர்

பெருமைகள் பல கொண்ட இந்த திவ்ய க்ஷேத்திரத்தில் வாசகர்கள் நலனுக்காக அவர்கள் வேண்டுதல்கள் யாவும் நிறைவேற விசேஷ சங்கல்பம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். வரும் டிசம்பர் 16 (மார்கழி 1) புதன்கிழமை அன்று காலை 10 மணி முதல் ஸ்ரீஆதி வராக மூர்த்திக்கு விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற உள்ளன. இங்குள்ள லிங்கை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளும் வாசகர்களுக்கு சிறப்பு சங்கல்பம் செய்ய இருக்கிறோம்.

நீங்களும் சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு