Published:Updated:

`ஆசியாவின் பெரிய குதிரை சிலைக்குக் குவிந்த மாலைகள்!' - புதுக்கோட்டையில் களைகட்டிய மாசித் திருவிழா

ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை
ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை

கோயிலின் முன்பு அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலையின் உயரத்துக்கு ஏற்ப சுமார் 3,000-க்கும் மேற்பட்ட காகித மற்றும் பூ மாலைகள் நேர்த்திக்கடனாக அணிவிக்கப்பட்டன.

புதுக்கோட்டை அருகே குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில். இங்கு ஒவ்வொரு வருடமும் மாசித் திருவிழா 2 நாள்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு நடைபெற்ற மாசித் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை
ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை

விழாவின் முக்கிய நிகழ்வாக, கோயிலின் முன்பு அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலையின் உயரத்துக்கு ஏற்ப சுமார் 3,000-த்துக்கும் மேற்பட்ட காகித மற்றும் பூ மாலைகள் நேர்த்திக்கடனாக அணிவிக்கப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகப் பக்தர்கள் கார், லாரி போன்ற வாகனங்களில், சிலை உயரத்துக்கு ஏற்ப மலர் மற்றும் காகிதப்பூ மாலைகளை எடுத்து வந்து குதிரை சிலைக்கு அணிவித்துவிட்டுச் சென்றனர்.

விழாவையொட்டி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே குதிரை சிலைக்கு மாலை கட்டும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில்தான், தற்போது இந்த பிரமாண்ட மாலைகள் குதிரையின் கழுத்தை அலங்கரித்து நிற்கின்றன. புதுக்கோட்டை மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மாசித்திருவிழாவில் கலந்து கொண்டு அய்யானாரின் அருள் பெற்றுச் சென்றனர்.

`குதிரைங்க அதிர்ஷ்டத்தை சுழிய வச்சே சொல்லிடலாம்!' கொடைக்கானல் `குதிரை' ரமேஷ்

அய்யானார் சந்நிதியில் அன்னதானம் போடுவதாக வேண்டிக்கொண்டவர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாசித் திருவிழாவையொட்டி, புதுக்கோட்டை, அறந்தாங்கியில் இருந்து சிறப்புப் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

அடுத்த கட்டுரைக்கு