Published:Updated:

மயிலாடுதுறை: 1,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஆலயம் - திருப்பணியை தரும்புரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்!

தரும்புரம் ஆதீனம்
News
தரும்புரம் ஆதீனம்

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் கடைசியாக 1999 -ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில் நேற்று (12.12.2021) மீண்டும் கும்பாபிஷேகத் திருப்பணிகள் தொடங்கின.

மயிலாடுதுறை அருகே 1000 ஆண்டுகள் பழைமையான வாகீஸ்வரர் ஆலயத்தில் பாலாலயம் செய்து தருமபுரம் ஆதினம் 27-வது குருமகா சந்நிதானம் அடிக்கல் நாட்டிக் கும்பாபிஷேகத் திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.

தரும்புரம் ஆதீனம் துவக்கிவைத்தார்.
தரும்புரம் ஆதீனம் துவக்கிவைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ளது பெருஞ்சேரி. இங்கு தத்தசோழன் காலத்தில் கட்டப்பட்ட 1,000 ஆண்டுகள் பழைமையான சுவாதந்தரநாயகி உடனாகிய வாகீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலுள்ள மயூரநாதரை வழிபட்ட வியாழன், 'தேவர்களுக்கெல்லாம் தலைவராக வேண்டும்' என்ற வரம் கேட்டார்.

"பெருஞ்சேரி கிராமம் சென்று. ஈசனை பிரதிஷ்டை செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கும்" என்று வியாழனுக்கு  அருளினார் மாயூரநாதர். அதன்படி பெருஞ்சேரியில் சுவாதந்தர நாயகி உடனாகிய வாகீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வியாழன்  வழிபட்டதாக ஐதிகம். மேலும் இக்கோயில் சந்திரன், தாரை, சரஸ்வதி தேவி மற்றும் 48,000 முனிவர்கள் யாகம் செய்து வழிபட்ட தலம் என்கிறது புராண வரலாறு. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் கடைசியாக 1999 -ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில் நேற்று (12.12.2021) மீண்டும் கும்பாபிஷேகத் திருப்பணிகள் தொடங்கின.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தருமபுரம் ஆதினம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் எழுந்தருளி, கிராம மக்கள் ஒத்துழைப்போடு பாலாலயம் செய்து, அடிக்கல் நாட்டி வைத்து கும்பாபிஷேகத் திருப்பணியை தொடங்கிவைத்தார்.

தரும்புரம் ஆதீனம் துவக்கிவைத்தார்.
தரும்புரம் ஆதீனம் துவக்கிவைத்தார்.

இதில் ஆடிட்டர் குரு சம்பத்குமார், மாயூரம் கூட்டுறவு வங்கி தலைவர் செந்தில்நாதன், கோயில் செயல் அலுவலர் கயல்விழி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 22 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த பணிகளைத் தொடங்கியிருப்பது கிராம மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.