Published:Updated:

மயிலாடுதுறை: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தரும்புரம் ஆதீனம் - நோயில்லா பாரதம் விளங்க ஆசி!

தரும்புரம் ஆதீனம்
தரும்புரம் ஆதீனம்

"இந்தக் கொடிய நோயை அனைவரும் ஒற்றுமையாக இணைந்து விரட்டி அடிப்போம். இதற்கு தடுப்பூசி கண்டறிந்து வழிவகை செய்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்." - ஆதீனகர்த்தர்

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று நோய் தற்போது தனது தாக்கத்தில் இரண்டாம் நிலையை எட்டியுள்ளது.

ஏற்கனவே அதன் பாதிப்புகளில் சிக்குண்ட மக்களின் நலன் கருதி, இந்திய அரசும் தமிழக அரசும் இணைந்து கொரோனா தடுப்பு மருந்துகளை நாடு முழுவதும் வழங்கி வருகின்றது.

தரும்புரம் ஆதீனம்
தரும்புரம் ஆதீனம்

இந்த முன்னெச்செரிக்கை செயல் மூலம் மக்கள் இனி வரும்காலங்களில் நோய் பாதிப்பு ஏற்படாத வகையில் கொரோனா தடுப்பு மருந்துகள் இரு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்கள் நோய் பற்றிய அச்சத்திலிருந்து சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இதனை ஊக்குவிக்கும் வகையில் தருமையாதீனம் 27-ம் நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அரசின் வேண்டுகோளை ஏற்று கோவிட் தடுப்பு மருந்தை இரு தவணைகளாக செலுத்திக் கொண்டார்கள்.

தரும்புரம் ஆதீனம்
தரும்புரம் ஆதீனம்

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதீனகர்த்தர்,

"கொரோனா தீணுன்மி தாக்கம் தற்போது அதிகரித்து வரும் வேளையில் மக்கள் அனைவரும் நல்ல பாதுகாப்பு மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளோடு இருத்தல் அவசியம். நமக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதன் மூலம் நம்மை சுற்றியுள்ளவர்களும் பாதுகாப்பாகவும் அச்சமின்றியும் இருப்பார்கள். இந்தக் கொடிய நோயை அனைவரும் ஒற்றுமையாக இணைந்து விரட்டி அடிப்போம். இதற்கு தடுப்பூசி கண்டறிந்து வழிவகை செய்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

அதுமட்டும் இல்லாமல் மடத்தின் ஊழியர்களையும், அன்பர்களையும் அழைத்துச் சென்று தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ள அருள் செய்தார்கள். குருமணிகளின் அறிவுறுத்தலின் படி அனைவரும் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டனர். நோயில்லா பாரதம் படைக்க திருவருள் வழங்கிய குருமணிகளிடம் ஆசிபெற்றனர்.

அடுத்த கட்டுரைக்கு