மயிலாடுதுறை அருகே திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரங்கநாதர் ஆலயப் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, பெருமாள், தாயாருடன் சந்திரபுஷ்கரணி தீர்த்தத்தில் எழுந்தருளும் தெப்போற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

சுமார் 1,500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பரிமளரெங்கநாதர் ஆலயம் ஸ்ரீரங்கப்பட்டினம், ஸ்ரீரங்கம், சாரங்கம், கோவிலடி, பரிமளரங்கம் என்று பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்பாலிக்கும் பஞ்ச அரங்க ஆலயங்களுள் ஒன்றாகும். இந்த ஆலயம் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 -வது திவ்ய தேசமாகும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த ஆலயம் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது திவ்ய தேசமாகும். இந்திரன், சந்திரன், வேதங்கள் வழிபட்ட இந்த ஆலயத்தில், இந்தாண்டு பங்குனி உற்சவம் கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆலயத்தின் முக்கியத் திருவிழாவான தெப்போற்சவம் நேற்றிரவு நடைபெற்றது.

கோயிலிலிருந்து வானவேடிக்கையுடன், மங்கல வாத்தியங்கள் முழங்க பெருமாள், தாயாருடன் ஆலய சந்திரபுஷ்கரணி தீர்த்தத்தில், மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். 3 சுற்றுக்கள் நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.