Published:Updated:

மயிலாடுதுறை துலா உற்சவம்: காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கோலாகலமாய் நடைபெற்ற திருக்கல்யாணம்!

திருக்கல்யாணம்

மயிலாடுதுறையில் காவேரி ஆற்றை மையப்படுத்தி ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

மயிலாடுதுறை துலா உற்சவம்: காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கோலாகலமாய் நடைபெற்ற திருக்கல்யாணம்!

மயிலாடுதுறையில் காவேரி ஆற்றை மையப்படுத்தி ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

Published:Updated:
திருக்கல்யாணம்

மயிலாடுதுறை துலா உற்சவத்தின் ஒரு பகுதியாக பழைமைவாய்ந்த காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தருமபுர ஆதீனகர்த்தர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

திருக்கல்யாணம்
திருக்கல்யாணம்

மயிலாடுதுறையில் காவேரி ஆற்றை மையப்படுத்தி ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பத்து நாள் உற்சவத்தில் தினம்தோறும் சுவாமி காவேரிக் கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி அளித்தல், திருக்கல்யாணம், திருத்தேர் மற்றும் 16-ம் தேதி நடைபெறும் தீர்த்தவாரி உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். புராணங்களில் குறிப்பிட்டபடி காசிக்கு இணையான 6 இடங்களில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். 

கங்கைக்கரையில் அமைந்த காசியைப்போன்று காவிரிக்கரையில் 7 இடங்களில் விஸ்வநாதர் ஆலயங்கள் இங்கு அமைந்துள்ளன. இதில் ஒன்றான பழைமை வாய்ந்த துலாக்கட்ட காசி விஸ்வநாதர் ஆலயத்தின் துலா உற்சவம் கடந்த 7-ம்  தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதன் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் இன்று (10.10.2022) நடைபெற்றது. இதனையொட்டி, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, யாகசாலை மண்டபத்திற்கு சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளினர். அங்கு வேதியர்கள் யாகம் வளர்த்து, வேதமந்திரங்கள் முழங்க, பெண்கள் சீர்வரிசை எடுத்து வர, மாலை மாற்றுதல் மற்றும் மாங்கல்யதாரணம் நிகழ்வுகள் முடிந்து, திருமண வைபவம் நடைபெற்றது.  

திருக்கல்யாணம்
திருக்கல்யாணம்

இதில் தருமபுர ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்பாள் வீதியுலா நடைபெற்று வருகிறது.