Published:Updated:

மயிலாடுதுறை: ஐகோர்ட் கண்காணிப்பில் வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு... எப்போது நடைபெறுகிறது?

வைத்தீஸ்வரன் கோயில்
News
வைத்தீஸ்வரன் கோயில்

மயிலாடுதுறை: ஐகோர்ட் கண்காணிப்பில் ஏப்ரல் 29-ம் தேதியன்று வைத்தீஸ்வரன்கோயில் குடமுழுக்கு நடைபெறும்.

22 ஆண்டுகளுக்குப்பின் நடைபெறும் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ வைத்தியநாதசுவாமி கோயில் குடமுழக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசிக்கக் காத்திருந்தனர். ஆனால் கொரோனா தொற்றுப்பரவல் கட்டுப்பாடுகளால் கோயில் ஊழியர்களை கொண்டே திட்டமிட்டபடி ஏப்ரல் 29-ம் தேதி நடைபெறவுள்ளது.

26-வது தருமையாதீன குருமகா சந்நிதானம் திருக்கரங்களால் பாலாலயம் செய்யப்பெற்ற வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ வைத்தியநாதசுவாமி திருக்கோயில் குடமுழுக்கானது, குருவருளுடனும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமியின் திருவருளுடனும், 27-வது ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பரமாச்சார்ய சுவாமிகள் திருவுளப்படியும்,  சிறப்பாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தீஸ்வரன்கோயில்
வைத்தீஸ்வரன்கோயில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதற்கிடையே இரண்டாவது கொரோனா அலை பரவலைச் சுட்டிக்காட்டி கும்பாபிஷேக விழாவிற்குத் தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்புப் பேரவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் அனைத்தும் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். கோயில் ஊழியர்களைக் கொண்டு கும்பாபிஷேக நிகழ்வு நடைபெறும். கும்பாபிஷேக நிகழ்வு நேரடியாக யூடியூப் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.

இதனை ஏற்று கும்பாபிஷேகத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். விதிகள் மீறப்பட்டால் அதிகப்படியான அபராதம் விதிக்கப்படும். கும்பாபிஷேக நிகழ்வை  கண்காணிக்கக் கண்காணிப்பாளர் ஒருவரை இந்த நீதிமன்றம் நியமிக்க உள்ளது" என்று உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வைத்தீஸ்வரன்கோவில் என்பது நோய் தீர்க்கும் தலம். 

"மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருளவல்லான் தன்னை..." 

என்பது அப்பர் சுவாமிகளின் தேவாரப்பாடல் வரிகள்.

இறைவன் வைத்தியநாதசுவாமி அனைத்து நோய்களைத் தீர்ப்பவர். மருத்துவரால் தீர்க்கமுடியாத வியாதிகளை கூட இவ்விறைவனிடம் பிரார்த்தனை செய்து இத்திருகோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டால் நோய்கள் தீர்ந்துவிடும் என்பது ஐதிகம்.

வைத்தீஸ்வரன் கோயில்
வைத்தீஸ்வரன் கோயில்

18 சித்தர்களில் மருத்துவ சித்தர் என்று அழைக்கப்படும் தன்வந்திரி பகவான் கோயில் கொண்டுள்ள இடமாகவும், நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்திற்கு உகந்த கோயிலாகவும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள சித்தாமிர்தத் திருக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் அனைத்து நோய்களும் குணமாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் இந்தக் குளத்தில் இன்றும் தவளைகள் உயிர் வாழ்வது இல்லை. செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியான தமிழ் கடவுள் முருகப்பெருமான் இங்கு முத்துக்குமாரசாமியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் மாதந்தோறும் கார்த்திகை ஆகிய தினங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

இறைவனுக்கு செய்யும் பூஜைகள் அபிஷேகங்கள் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் காலத்தில் முறைப்படி செய்தாலே நோய்த் தொற்றின் கடுமை குறையும் என்பது  அறிவுசார் ஆன்றோர்களின் கூற்று.

முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்

மன்னர்க்குத் தீங்கு உள வாரி வளம் குன்றும்

கன்னம் களவு மிகுந்திடும் காசினி

என் அரு நந்தி எடுத்து உரைத்தானே

எனத் திருமூலர் திருமந்திரத்தில் அருளியுள்ளார்.

பிரபல புரோகிதர் மற்றும் ஜோதிடருமான சிவஸ்ரீ.முனீஸ்வர சாஸ்திரிகள் என்பவர், தருமையாதீனத்திற்கு கீழ்கண்டவாறு ஆலோசனை கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“பிலவ ஆண்டுக்கு ராஜா அங்காரகன். இந்த வருஷம் கும்பாபிஷேகம் பண்ணுவது மிகவும் சிறப்பானதாகும். அபூர்வமான இந்த பிலவ வருடத்திற்கு ராஜா செவ்வாய், தேவதை அக்னி. வைத்தீஸ்வரன் கோயில் செவ்வாய் தலமாக இருப்பதாலும், (செவ்வாய்க்கு அதிபதி முருகன்) இத்தலம் ஸ்ரீ முத்துக்குமார சுவாமிக்கு விஷேசமான தலம் என்பதாலும் யாகசாலை மேடையில் ஸ்ரீ அங்காரகன் மற்றும் ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமி விக்ரஹங்களுக்கு ராஜ அலங்காரம் செய்து வைத்து வழிபாடுகள் செய்வது சிறப்பாக இருக்கும். மேலும் இந்த வருட தேவதை அக்னி. ஆதலால் அக்னி சாலையில் வைத்து செய்யும் ஜபம் மற்றும் ஹோமத்தால் உலகம் முழுக்க நலம் உண்டாகும்."

இதன்படியே கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

வைத்தீஸ்வரன் கோயில்
வைத்தீஸ்வரன் கோயில்

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு அமைப்பு மாவட்ட செயலாளரும், ஜோதிடர் மற்றும் சித்த மருத்துவருமான செந்தில்குமார் கூறுகையில், "வைத்தீஸ்வரன் கோயில் மிகவும் சிறப்புமிக்க இயற்கையுடன் தொடர்புடைய அறிவியலை உள்ளடக்கிய கோயிலாகும். இந்தக் கோயிலில் மருத்துவ சித்தராக இருந்து வரும் தன்வந்திரி பகவான் வீற்றிருப்பதால் இக்கோயில் கும்பாபிஷேகம் செய்து வழிபட்டால் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக விலகிவிடும் என்று நம்புவோம்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

குடமுழுக்கு விழாவையொட்டி தருமபுரத்தில் அலங்கரிக்கப்பட்ட ஆத்மார்த்த பூஜாமூர்த்தியான சொக்கலிங்கப் பெருமான் சிலையை தருமபுரம் குருமகாசந்நிதானம் தலையில் சுமந்து கடந்த 17-ம் தேதி கருலிங்க சங்கம பாதயாத்திரையை தொடங்கினார். பல்வேறு ஊர்கள் வழியாக வந்து வைத்தீஸ்வரன் கோயிலை அடைந்தார். கோயில் கட்டளை மடத்தில் சொக்கநாதப்பெருமான் எழுந்தருளிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சொக்கநாதபெருமானுக்கு குருமகா சந்நிதானம் பூஜைகள் செய்து தீபாராதனை காட்டி வணங்கினார்.

எல்லாம் வல்ல நம்பெருமான் புள்ளிருக்கு வேளூர் எனும் வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ தையல்நாயகி உடனுறை வைத்தியநாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா இனிதே நிறைவேறி, ஈசன் மனம் குளிர்ந்து பெருந்தொற்று முற்றிலும் அகன்று அனைவரும் நலமுடன் வாழ குடமுழுக்கு நாளன்று அனைவரும் வீட்டிலிருந்தே கூட்டு பிரார்த்தனை செய்வோமாக!