Published:Updated:

மதுரை: வந்திறங்கிய ராசிபுரக் கற்கள் - தீ விபத்தில் சேதமடைந்த மண்டபத்தைச் சீரமைக்கும் பணி தொடக்கம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

தீ விபத்தில் சேதமடைந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைக்கும் பணி 3 வருடங்களுக்கு பிறகு தற்போது தொடக்கம்!

புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 3 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட தீவிபத்தில் சேதமடைந்த வீரவசந்த ராயர் மண்டபத்தை சீரமைப்பதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது மதுரை மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 2018-ல் நடந்த பெரும் தீ விபத்தில் கோயிலின் ராஜகோபுரம் அருகில் அமைந்துள்ள வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தைத் தொடர்ந்து கோயில் பாதுகாப்பு சம்பந்தமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

வீரவசந்தராயர் மண்டபத்தை புனரமைக்க அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினர் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்து பழைமை மாறாமல் சீரமைக்க ஆலோசனைகளை அளித்தனர்.

அதன் பின்பு மண்டபத்தைச் சீரமைக்க 18 கோடி ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டது. மண்டபத்துக்கான தரமான கற்கள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டிணம் கிராமத்திலுள்ள குவாரியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ராசிபுரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கற்கள்
ராசிபுரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கற்கள்

அதேநேரம் அங்கிருந்து கற்கள் வெட்டியெடுத்து வருவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டு அது தாமதமாகிக் கொண்டிருந்தது. அதுமட்டுமில்லாது கொரோனா ஊரடங்கும் காரணமாகச் சொல்லப்பட்டது.

தூங்காநகர நினைவுகள் - 27: விடுதலை வேள்வியில் மதுரை!

தற்போது பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு கல்தூண்களை மதுரைக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. கனரக வாகனங்கள் மூலம் மதுரை அவனியாபுரம் அருகேயுள்ள செங்குளத்தில் கோயிலுக்குச் சொந்தமான தோட்டத்தில் கற்கள் கொண்டு வரப்பட்டு தூண்கள் வடிவமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

தூண்களாக வடிவமைக்கப்படவுள்ள கற்கள்
தூண்களாக வடிவமைக்கப்படவுள்ள கற்கள்

"வீர வசந்தராயர் மண்டபம் புனரமைக்கும் பணிக்கு முக்கியமானது ராசிபுரத்திலிருந்து கற்கள் கொண்டு வருவதுதான். தற்போது அது வர ஆரம்பித்துவிட்டது. இனி வேகமாக வேலைகள் நடந்து பழையபடி வீரவசந்தராயர் மண்டபம் மக்கள் வந்து பார்க்கும் வகையில் அமைக்கப்படும்" என்கிறார்கள் திருக்கோயில் ஊழியர்கள்.

அடுத்த கட்டுரைக்கு