Published:Updated:

மேல்மலையனூர் மாசி மயானக்கொள்ளைத் திருவிழா - சிறப்புகள் என்ன, எப்போது நடக்கிறது?

மேல்மலையனூர் அங்காளம்மன்

ஆண்டுதோறும் மேல்மலையனூரில் நடைபெறும் மாசிப் பெருந்திருவிழா இந்த ஆண்டும் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

மேல்மலையனூர் மாசி மயானக்கொள்ளைத் திருவிழா - சிறப்புகள் என்ன, எப்போது நடக்கிறது?

ஆண்டுதோறும் மேல்மலையனூரில் நடைபெறும் மாசிப் பெருந்திருவிழா இந்த ஆண்டும் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

Published:Updated:
மேல்மலையனூர் அங்காளம்மன்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆன்மிகச் சிறப்புப் பெற்ற ஆலயங்களில் ஒன்று ’மேல்மலையனூர் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம்.’ செஞ்சியிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது இந்தச் சிறப்பு மிக்க ஆலயம். பிரம்மனின் ஐந்தாவது சிரத்தைக் கொய்த சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொண்டிருந்த கபாலத்தை, பார்வதிதேவி தன் பாதத்தால் நசுக்கி அழித்த இடமாகக் கருதப்படுகிறது இந்த மேல்மலையனூர். அதன் பின்பு சிவபெருமானுக்கு ஏற்பட்டிருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிவிட, சிவபெருமானும் பார்வதித் தாயாரும் சாபம் நீங்கி சுய உருவினை அடைந்ததாகக் கூறுகிறது தலவரலாறு.

மேல்மலையனூர் அங்காளம்மன்
மேல்மலையனூர் அங்காளம்மன்

இதன் நினைவாகவே மயானக்கொள்ளைத் திருவிழா மேல்மலையனூரில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இந்த நிகழ்வின் போது, மிகுந்த கோபத்தில் இருந்த அங்காளம்மனை சாந்தப்படுத்தும் நிகழ்வாகவே தேர்த்திருவிழா நடத்தப்படுவதாகவும், அமாவாசை தினங்களில் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும் பக்தர்கள் சொல்கிறார்கள். அதன்படி, இந்த வருடமும் மாசி மாத அமாவாசை தினமான நாளை (02.03.2022) மேல்மலையனூர் மயானத்தில் மயானக் கொள்ளைத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த மேல்மலையனூர் அங்காளம்மனை வணங்கி வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள், நாளைய தினத்தில் காய்கனிகள், கொழுக்கட்டைகள், கீரைகள், சில்லறைக் காசுகள், தானியங்கள் எனப் பலவகைப் பொருள்களை வீசி எறிந்து கொள்ளை விடுவார்கள். மேல்மலையனூர் மயானத்தில் திருவிழா முடிந்ததும் அந்த மயானச் சாம்பலை எடுத்துச் சென்று தங்களின் வீடுகளில் துணியில் முடிந்து வாசலில் தொங்கவிட்டால் தீய சக்திகள் விலகும் என்றும், அன்றைய தினத்தில் அங்கு அருள்வாக்குச் சொல்பவர்களின் வார்த்தைகள் அப்படியே பலிக்கும் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

மயானக்கொள்ளைத் திருவிழா
மயானக்கொள்ளைத் திருவிழா

நாளைய தினம் மேல்மலையனூரில் நடைபெறவிருக்கும் மயானக்கொள்ளைத் திருவிழாவில் கலந்துகொண்டு அங்காள பரமேஸ்வரியை வழிபட சகல துன்பங்களும் நீங்கி நல்லருள் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அம்மன், மேல்மலையனூரில் புற்றில் பாம்பாக இருந்ததாகக் கூறப்படுவதனால், அவர் இன்றளவும் அவ்வாறே காட்சி தருகிறார். அங்குள்ள புற்று மண்ணை நெற்றியில் பூசி வழிபட்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிட்டும் என நம்புகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அங்காளபரமேஸ்வரி அம்மனின் மீதுள்ள பக்தியாலும், பிரசித்திபெற்ற இந்தத் திருவிழாவைக் கண்டுகளிப்பதற்காகவும், தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்காகவும் தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு குவிவார்கள். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகா சிவராத்திரியில் இருந்து 13 நாள்கள் இந்தப் பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது. நேற்றைய தினம் கொடியேற்றம் நடைபெற்ற நிலையில், கீழ்க்காணும் தேதிகளில் இத்திருவிழா தொடர்ந்து சிறப்பாக நடைபெறவுள்ளது.

தீயசக்திகளை அடித்துவிரட்டும் அங்காள பரமேஸ்வரியின் மயானக்கொள்ளை!
தீயசக்திகளை அடித்துவிரட்டும் அங்காள பரமேஸ்வரியின் மயானக்கொள்ளை!

மாசி 18 (02.03.2022) - மயானக்கொள்ளை

மாசி 21 (05.03.2022) - தீமிதி விழா உற்சவம்

மாசி 23 (07.03.2022) - திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவம்

மாசி 26 (10.03.2022) - அம்மன் தெப்பல் உற்சவம்

மாசி 29 (13.03.2022) - காப்பு களைதல்

பிரசித்திபெற்ற இந்த மாசித் திருவிழாவில் கலந்துகொண்டு அம்மனை மனமுருக வேண்டி நிறைந்த அருளைப் பெறுவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism