Published:Updated:

"பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் ஜூலையில் நடக்கும்!"- அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உறுதி

அமைச்சர் சேகர்பாபு
News
அமைச்சர் சேகர்பாபு

"கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோயில்களுக்குச் சென்று புத்தாண்டை கொண்டாட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல பக்தர்கள் மனம் புண்படாதபடி தைப்பூச திருவிழா நடத்துவது குறித்து முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார்." - அமைச்சர் சேகர்பாபு

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பெண்கள் கலைக்கல்லூரியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதையடுத்து பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, தமிழகத்தில் உள்ள 659 திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வரும் ஜூலையில் கும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பழனி பகுதியில் உள்ள பழனியாண்டவர் மகளிர் கல்லூரிக்குத் தேவையான கூடுதல் கட்டடங்கள், விளையாட்டு உபகரணங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. பழனியில் சித்த மருத்துவக் கல்லூரிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அடுத்த ஆண்டுக்குள் கல்லூரி மற்றும் சித்த மருத்துவமனைத் தொடங்கப்படும். இதற்கான தற்காலிக சித்த மருத்துவக் கல்லூரி அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தொடங்கப்படும்.

கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோயில்களுக்குச் சென்று புத்தாண்டை கொண்டாட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல பக்தர்கள் மனம் புண்படாதபடி தைப்பூச திருவிழா நடத்துவது குறித்து முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார். தமிழகம் முழுவதும் உள்ள கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு அவை அனைத்தும் மகிழ்ச்சியுடன் உள்ளன. மேலும் பல கோயில்களில் யானைகள் குளிப்பதற்கு தனி வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன" என்றார்.

பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி
பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் மலை அடிவாரத்தில் தவில், நாதஸ்வரம் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டயம் மற்றும் தவில், நாதஸ்வர கருவிகள் வழங்கி வாழ்த்தினர். அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மலையடிவாரத்தில் அமைய உள்ள முதியோர் இல்ல கட்டடப் பணிக்கான இடத்தையும் ஆய்வு செய்தனர்.