Published:Updated:

"ஆதீனங்கள், மடாதிபதிகளுக்கு, தமிழக அரசு உரிய மரியாதை அளித்து வருகிறது!" - அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

"ஆதீனங்கள், மடாதிபதிகளுக்கு, அரசு உரிய மரியாதை அளித்து வருகிறது. அதில் ஏதேனும் குறை ஏற்பட்டிருந்தால் இனி வரும் காலங்களில் சரி செய்யப்படும்" எனத் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

"ஆதீனங்கள், மடாதிபதிகளுக்கு, தமிழக அரசு உரிய மரியாதை அளித்து வருகிறது!" - அமைச்சர் சேகர் பாபு

"ஆதீனங்கள், மடாதிபதிகளுக்கு, அரசு உரிய மரியாதை அளித்து வருகிறது. அதில் ஏதேனும் குறை ஏற்பட்டிருந்தால் இனி வரும் காலங்களில் சரி செய்யப்படும்" எனத் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

Published:Updated:
அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசின் இலச்சினையாக விளங்கும் கோபுரம் அமைந்துள்ள ஸ்ரீஆண்டாள் கோயிலில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு முதல் முறையாக வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.

"தெப்பத்திருவிழா நடக்கும் திருமுக்குளத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை சரி செய்து விரைவில் அங்கு தெப்பத் திருவிழா நடக்க ஏற்பாடு செய்யப்படும்" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து, "முதலமைச்சர் அறிவிப்பின் அடிப்படையில் நாளை குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் 108 விளக்கு பூஜை நடைபெறும்.

அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்திற்கு அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் தமிழகத்தில் நடைபெறும் தேர் திருவிழாக்களில் இதுபோன்ற அசம்பாவிதம் நடக்காத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை ஆக்கிரமித்திருக்கும் நபர்கள் யாராயினும் அவர்கள் உடனே அப்புறப்படுத்தப்பட்டு அந்த இடங்கள் சம்பந்தப்பட்ட கோயிலின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்.

அமைச்சர் சேகர்பாபு ஜீயருடன் சந்திப்பு
அமைச்சர் சேகர்பாபு ஜீயருடன் சந்திப்பு

மேலும் ஆதீனங்கள், மடாதிபதிகளுக்குத் தமிழக அரசு உரிய மரியாதை அளித்து வருகிறது. அதில் ஏதும் குறைபாடு இருந்திருந்தால் இனிவரும் காலங்களில் அது சரி செய்யப்படும். ஸ்ரீவில்லிபுத்தூர் எனப்படும் புண்ணிய ஸ்தலத்தில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்" என்றார்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபுவை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமாநுஜ ஜீயர் சந்தித்து 10 நிமிடங்கள் உரையாடினார். பின்னர் அவர் அங்கிருந்து கிளம்பி தூத்துக்குடி மாவட்டம் சென்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism