Published:Updated:

திருப்பதி, பழநி போன்ற முக்கிய கோயில்களில் 31-ம் தேதிவரை தரிசனம் ரத்து!

திருப்பதி
திருப்பதி

அனைத்து சந்நிதிகளிலும் ஆகம விதிகளுக்கு உட்பட்டு பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும்விதமாக `தேசிய பேரிடர்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளின் தொடர் நடவடிக்கையாக பக்தர்களின் நலன் கருதி 20.3.2020 காலை 8 மணி முதல் திருக்கோயில்களில் பக்தர்களின் தரிசன அனுமதி நிறுத்தி வைக்கப்படுகிறது.

Tiruchendur
Tiruchendur

அனைத்து சந்நிதிகளிலும் ஆகம விதிகளுக்கு உட்பட்டு பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும். பக்தர்கள் திருக்கோயில் நிர்வாகத்துக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருக்கோயில்களின் பட்டியல்:

1) மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

2) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

3) ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்

4) பழநி முருகன் கோயில்

5) ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்

Pazhani Temple
Pazhani Temple

6) சமயபுரம் மாரியம்மன் கோயில்

7) திருவாரூர் ஆரூரான் கோயில்

8) சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில்

9) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

10) திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்

11) காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்

12) வடபழனி முருகன் கோயில்

13) திருத்தணி முருகன் கோயில்

14) மயிலை கபாலீஸ்வரர் கோயில்

ஆகிய கோயில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன .

இந்தக் கோயில்களில் கோயில் அர்ச்சகர்கள் மூலம் பூஜைகள் மட்டும் நடைபெறும். பக்தர்களுக்கு தரிசனம் அனுமதி மறுக்கப்படுகிறது.

20 -ம் தேதி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

Murugan
Murugan

திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயில்:

திருமலை திருப்பதி கோயில் நிர்வாக அதிகாரி தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில், திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு வருகிற மார்ச் 31-ம் தேதி வரை சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. திருமலைக்குச் செல்லும் அலிப்பிரி வழி, ஶ்ரீவாரி மெட்டு ஆகிய இரண்டு மலைப்பாதைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மயிலை சாய்பாபா கோயில்

ஏற்கெனவே ஷீர்டி சாய்பாபா கோயில் பக்தர்கள் தரிசனத்துக்கு ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் நேற்று 19-ம் தேதி மதியம் 3 மணியிலிருந்து பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது

Sai Baba
Sai Baba

பக்தர்களின் தரிசனத்துக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அகில இந்திய சாயி சமாஜம் தெரிவித்துள்ளது. சாயி இலவச மருத்துவமனை வழக்கம்போல் செயல்படும் என்றும் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு