Published:Updated:

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு புதிய முத்தங்கி வழங்கிய திருப்பூர் பக்தர் - இதன் சிறப்புகள் என்னென்ன?

நாமக்கல் ஆஞ்சநேயர்

திருப்பூர் பக்தர் ஒருவர் வழங்கிய புதிய முத்தங்கி அணிவிக்கப்பட்டு புதிய அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் காட்சியளித்தார். அதை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு புதிய முத்தங்கி வழங்கிய திருப்பூர் பக்தர் - இதன் சிறப்புகள் என்னென்ன?

திருப்பூர் பக்தர் ஒருவர் வழங்கிய புதிய முத்தங்கி அணிவிக்கப்பட்டு புதிய அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் காட்சியளித்தார். அதை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

Published:Updated:
நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் நகரில், பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது ஆஞ்சநேயர் திருக்கோயில். இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி, சாந்த சொரூபியாக வணங்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாள்தோறும் இந்தியா முழுவதும் இருந்து வரும் திரளான பக்தர்கள், ஆஞ்சநேயர் சந்நிதிக்கு வருகைதந்து, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தினசரி ஆஞ்சநேயர் சாமிக்குக் காலை காலை 8 மணிக்கு வடைமாலை அலங்காரம் நடைபெறும். தொடர்ந்து, மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதனையடுத்து, சுவாமிக்குத் தங்கக்கவசம், வெள்ளிக்கவசம், புஷ்ப அங்கி, வெற்றிலை அலங்காரம் போன்ற பல்வேறு அலங்காரங்கள் மதிய வேளையில் நடைபெறும். அதேபோல், ஆஞ்சநேயருக்கு வருடத்தில் கார்த்திகை மாதத்திலும், தை மாதத்திலும் வெண்ணெய்க்காப்பு அலங்காரம் நடைபெறும்.

நாமக்கல் ஆஞ்சநேயர்
நாமக்கல் ஆஞ்சநேயர்

நேற்று புரட்டாசி மாதம் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயருக்குப் புதிய முத்தங்கி அலங்காரம் சாற்றுப்படி செய்யப்பட்டது. இந்த முத்தங்கியைத் திருப்பூர் பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கி உள்ளார். இந்த முத்தங்கி, மதுரையைச் சேர்ந்த திருமுருகன் என்பவரால் கடந்த ஒரு மாதமாகக் கலை நுணுக்கத்துடன், விலை உயர்ந்த முத்துக்களால் தொடுக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைக்கொண்டு ஆஞ்சநேயருக்குச் சிறப்பான அலங்காரம் நடைபெற்றது.

தொடர்ந்து, தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். 'முத்தங்கி சேவையில் நாமக்கல் அனுமனைத் தரிசனம் செய்தால், இழந்த பொருள், நிம்மதி ஆகியன கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதோடு, பக்தர்களுக்கு ராஜயோகம் தருவார் ஆஞ்சநேயர். மேலும், சனி பகவானின் தாக்கத்திலிருந்து நம்மைக் காத்தருளுவார் அனுமன் என்றும் போற்றுகிறார்கள். அதனால், நாமக்கல் அனுமனைத் தரிசிக்கப் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.