Published:Updated:

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: "ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தரிசன அனுமதி!"- உதவி ஆணையர் தகவல்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்
News
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் ( நா.ராஜமுருகன் )

"முகக்கவசம் அணியாதவர்களுக்கு கோயிலுக்குள் செல்ல கண்டிப்பாக அனுமதி இல்லை. மேலும், உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்."

நாமக்கல்லில் இருக்கும் மிகவும் பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் கோயிலுக்கு அதிக பக்தர்கள் வருகை தருவது வழக்கம். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால், இது தொடர்பாக பல்வேறு விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. தமிழகமெங்கும் இருக்கும் வழிபாட்டுத் தலங்களுக்குச் சொல்லப்பட்ட நெறிமுறைகள் இங்கேயும் பின்பற்றப்படுகின்றன.

நாமக்கல் ஆஞ்சநேயர்
நாமக்கல் ஆஞ்சநேயர்
நா.ராஜமுருகன்

இந்த நிலையில், அடுத்த மாதம் 2-ம் தேதி இந்தக் கோயிலில் நடக்கும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில், இணையதளம் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி தரப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுகுறித்து, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உதவி ஆணையர் ரமேஷ் செய்தியாளர்களிடம்,

"நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஜனவரி மாதம் 2-ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அன்று காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு 500 பக்தர்கள் வீதம் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இலவசம் அல்லது கட்டண வழியில் சென்று சாமி தரிசனம் செய்யலாம். ஆனால், அதற்கு பக்தர்கள் hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் மட்டுமே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியோடு கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்

முகக்கவசம் அணியாதவர்களுக்கு கோயிலுக்குள் செல்ல கண்டிப்பாக அனுமதி இல்லை. அதேபோல், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், ஆஞ்சநேயர் ஜெயந்தி நிகழ்ச்சிகளை சமூக வலைதளங்களில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதனால், நேராக வர இயலாதவர்கள் சமூகவலைதள நேரலை காணொலிகள் மூலம் கண்டுக்களிக்கலாம்" என்று தெரிவித்தார்.