Published:Updated:

நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா; 10,000 பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்!

நத்தம் மாரியம்மன் கோயில்

மார்ச் 22-ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கழுமரம் ஏறுதல், பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். மறுநாள் அம்பாள், மஞ்சள் நீராடுதலை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டு நகர்வலமாக வந்து அம்மன் கோயிலை சென்றடைவார்.

நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா; 10,000 பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்!

மார்ச் 22-ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கழுமரம் ஏறுதல், பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். மறுநாள் அம்பாள், மஞ்சள் நீராடுதலை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டு நகர்வலமாக வந்து அம்மன் கோயிலை சென்றடைவார்.

Published:Updated:
நத்தம் மாரியம்மன் கோயில்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் மாரியம்மன் கோயில் தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இதன் முக்கிய திருவிழாவான மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் உலுப்பகுடி அருகிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து அங்கிருந்து புனித தீர்த்தக் குடங்கள் எடுத்து வந்து சந்தனக் கருப்பு கோயிலில் சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாகச் சென்று அங்கு கூடியிருந்த பக்தர்களைக் கோயிலுக்கு அழைத்து வந்தனர். பின்னர் பக்தர்கள் தீர்த்தக் குடங்களைத் தலையில் சுமந்த படி ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'கோவிந்தா' கோஷம் முழங்க மீனாட்சிபுரம், பஸ்நிலையம், மார்க்கெட் வீதி, பெரிய கடை வீதி வழியாக வந்து மாரியம்மன் கோயிலைச் சென்றடைந்தனர்.

வழிபாடு
வழிபாடு

பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. மாரியம்மன் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டினர். இதில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள்கள் விரதம் தொடங்கினர். அம்மன் குளத்திலிருந்து கம்பம் நகர்வலமாகக் கொண்டு வரப்பட்டு கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காப்பு கட்டிய பக்தர்கள்
காப்பு கட்டிய பக்தர்கள்

இதனைத் தொடர்ந்து வரும் மார்ச் 11, 15, 18 ஆகிய தேதிகளில் அம்மன் சர்வ அலங்காரத்தில் மயில், சிம்மம், அன்ன வாகனத்தில் எழுந்தருளி மின்ரதத்தில் ஊர்வலமாக நத்தத்தின் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்து செல்லும். இந்த விழா நாள்களில் பக்தர்கள் கோயிலுக்கு வந்து அக்னிசட்டி எடுத்தல், மாவிளக்கு, கரும்புத்தொட்டில், அங்கப்பிரதட்சணம், அலகுகுத்துதல், அரண்மனைப் பொங்கல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துவார்கள். மார்ச் 22-ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கழுமரம் ஏறுதல், பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். மறுநாள் அம்பாள், மஞ்சள் நீராடுதலை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டு நகர்வலமாக வந்து அம்மன் கோயிலை சென்றடைவார்" என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.