Published:Updated:

நீலகிரியில் களைகட்டும் ஹெத்தையம்மன் திருவிழா; கோயில்களில் குவியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!

ஹெத்தையம்மன் திருவிழா

இந்தத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பல நாள்கள் விரதமிருந்த பக்தர்கள் வெள்ளை நிற உடையணிந்து ஹெத்தையம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

நீலகிரியில் களைகட்டும் ஹெத்தையம்மன் திருவிழா; கோயில்களில் குவியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!

இந்தத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பல நாள்கள் விரதமிருந்த பக்தர்கள் வெள்ளை நிற உடையணிந்து ஹெத்தையம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

Published:Updated:
ஹெத்தையம்மன் திருவிழா

நீலகிரியில் பெரும்பான்மையாக வாழந்து வரும் படுகர் இன மக்கள் மூதாதையான ஹெத்தையம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஹெத்தையம்மனின் மூல ஆலயம் கோத்தகிரி அருகில் உள்ள பேரணி கிராமத்தில் அமைந்துள்ளது. இது தவிர ஏராளமான படுகர் கிராமங்களிலும் ஹெத்தையம்மன் கோயில் உள்ளன.

ஹெத்தையம்மன் திருவிழா
ஹெத்தையம்மன் திருவிழா

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஹெத்தையம்மன் திருவிழா மிகவும் படுகர் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பல நாள்கள் விரதமிருந்த பக்தர்கள் வெள்ளை நிற உடையணிந்து ஹெத்தையம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் பேரகணி ஹெத்தையம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். படுகர் இனத்தைச் சேர்ந்த சாய் பல்லவி பாரம்பர்ய உடையணிந்து சாமி தரிசனம் செய்தார். பா‌.ஜ.கவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருவிழாவில் கலந்து கொண்டார்.

ஹெத்தையம்மன் திருவிழா
ஹெத்தையம்மன் திருவிழா

தற்போது பல படுகர் கிராமங்களில் ஹெத்தையம்மன் திருவிழா நடைபெற்று வருவதால் பல கிராமங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

திருவிழா குறித்துத் தெரிவித்த படுகர் இன மக்கள், "எங்கள் மக்களைக் காக்கும் கடவுளாக ஹெத்தையம்மன் இருந்து வருகிறார். ஹெத்தையம்மனை நினைத்துக் காணிக்கை முடிந்தால் அடுத்த ஆண்டு திருவிழாவுக்குள் அது நிறைவேறும்.

ஹெத்தையம்மன் திருவிழா
ஹெத்தையம்மன் திருவிழா

கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாருமே உணவு அருந்தாமல் செல்லாத வகையில் பார்த்துக் கொள்வதும் எங்களின் முக்கியக் கடமை. கேத்தி உள்ளிட்ட கோயில்களில் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த மாத இறுதி வரை விழா களைகட்டும்" என்றனர் பக்தர்கள்.