Published:Updated:

ராஜ உடையில் பாரம்பர்ய நடனம்; நீலகிரியில் களைகட்டிய கோத்தர் பழங்குடிகளின் குலதெய்வ வழிபாடு!

கோத்தர் பழங்குடி திருவிழா
News
கோத்தர் பழங்குடி திருவிழா

பாரம்பர்யம் கொண்ட தங்களின் தாய்மொழி, இசைக்கருவிகள், உடை, உணவு, வழிபாடு என கோத்தர் பழங்குடியினர் இன்றும் தங்களின் கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

ராஜ உடையில் பாரம்பர்ய நடனம்; நீலகிரியில் களைகட்டிய கோத்தர் பழங்குடிகளின் குலதெய்வ வழிபாடு!

பாரம்பர்யம் கொண்ட தங்களின் தாய்மொழி, இசைக்கருவிகள், உடை, உணவு, வழிபாடு என கோத்தர் பழங்குடியினர் இன்றும் தங்களின் கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

Published:Updated:
கோத்தர் பழங்குடி திருவிழா
News
கோத்தர் பழங்குடி திருவிழா

நீலகிரியில் வாழ்ந்து வரும் பண்டைய பழங்குடி மக்களான கோத்தர் பழங்குடிகள் தங்களுக்கே உரிய தனித்துவமான பாரம்பர்ய வாழ்வியல் முறைகளை இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர். கோக்கால் எனப்படும் 7 கிராமங்களில் வாழ்ந்து வரும் கோத்தர் பழங்குடிகள் தங்களின் தாய்மொழி, இசைக்கருவிகள், உடை, உணவு, வழிபாடு என கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். டிசம்பர் இறுதியிலிருந்து ஜனவரி முதல் வாரம் வரை தங்கள் குலதெய்வமான ஐய்னோர், அம்னோருக்கு விழா எடுத்துச் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

கோத்தர் பழங்குடி திருவிழா
கோத்தர் பழங்குடி திருவிழா

அறுவடைத் திருவிழா முதல் மூதாதையர் வழிபாடுவரை இந்த விழாவில் இடம் பெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கோத்தர் பழங்குடி கிராமங்களில் பாரம்பர்ய முறைப்படி நடைபெற்றது ஊட்டி அருகில் உள்ள கொல்லிமலை கிராமத்தில் நடைபெற்ற கம்பட்ராயர் விழாவில் ஏராளமான கோத்தர் பழங்குடிகள் தங்களின் பாரம்பர்ய உடையணிந்து கம்பட்ராயரை வழிபட்டனர்.

பாரம்பர்ய இசைக்கருவிகள் முழங்க ஆண்களும் பெண்களும் நடனமாடி வழிபட்டனர். கோயில் சேவையில் ஈடுபட்டு வரும் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் ராஜ உடையில் நடனமாடினர்.

கோத்தர் பழங்குடி திருவிழா
கோத்தர் பழங்குடி திருவிழா

பாரம்பர்யத் திருவிழா குறித்துத் தெரிவித்த கோத்தர் பழங்குடிகள், "எங்களின் குலதெய்வமான ஐய்னோர் அம்னோர் மற்றும் கம்பட்ராயர் ஆகியோர் எங்களைக் காத்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பழைமை மாறாமல் இதே முறையில் நடனமாடி வழிபாடு செய்து வருகிறோம். அனைத்து வளங்களையும் ஆண்டு முழுவதும் இயற்கை வழங்க வேண்டும் என இந்த நாளில் இயற்கையை வழிபடுவோம்" என்றனர்.