Published:Updated:

"மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டும்!"- உற்சாகமாகத் தொடங்கிய தோடர்களின் புத்தாண்டு

மொத்வர்த் திருவிழா
News
மொத்வர்த் திருவிழா

ஒட்டுமொத்தத் தோடர்களின் தாய் மந்தான (தோடர்கள் வசிக்கும் கிராமத்தை மந்து என்ற பெயரில் அழைக்கின்றனர்) ஊட்டி அருகில் உள்ள முத்தநாடு மந்தில் 'மொத்வர்த்' எனப்படும் புத்தாண்டு வழிபாடு நடைபெற்றது.

"மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டும்!"- உற்சாகமாகத் தொடங்கிய தோடர்களின் புத்தாண்டு

ஒட்டுமொத்தத் தோடர்களின் தாய் மந்தான (தோடர்கள் வசிக்கும் கிராமத்தை மந்து என்ற பெயரில் அழைக்கின்றனர்) ஊட்டி அருகில் உள்ள முத்தநாடு மந்தில் 'மொத்வர்த்' எனப்படும் புத்தாண்டு வழிபாடு நடைபெற்றது.

Published:Updated:
மொத்வர்த் திருவிழா
News
மொத்வர்த் திருவிழா

இருளர், குறும்பர், பணியர், காட்டு நாயக்கர், தோடர், கோத்தர் ஆகிய 6 வகையான பண்டைய பழங்குடியின மக்கள் நீலகிரியில் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்களும் தங்களுக்கே உரியத் தனித்துவமான பாரம்பர்ய உணவு, உடை, மொழி, இசை, நடனம், வழிபாடு போன்றவற்றை இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.

மொத்வர்த் திருவிழா
மொத்வர்த் திருவிழா

அப்பர் நீலகிரி எனப்படும் குளிர் நிறைந்த மலை உச்சிகளில் வாழ்ந்து வரும் தோடர் பழங்குடிகள் இயற்கையைத் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஆயர் சமூகமாக அறியப்படும் தோடரின மக்கள் உலகின் தனித்துவமிக்க தோடர் எருமைகளை வளர்த்து வருகின்றனர்.

ஒட்டுமொத்தத் தோடர்களின் தாய் மந்தான (தோடர்கள் வசிக்கும் கிராமத்தை மந்து என்ற பெயரில் அழைக்கின்றனர்) ஊட்டி அருகில் உள்ள முத்தநாடு மந்தில் 'மொத்வர்த்' எனப்படும் புத்தாண்டு வழிபாடு நடைபெற்றது. அனைத்து மந்திலும் இருந்து தோடர் இன ஆண்கள் பங்கேற்றனர். பாரம்பர்ய உடையணிந்து நடனமாடி வழிபட்டனர்.

மொத்வர்த் திருவிழா
மொத்வர்த் திருவிழா

இந்த மொத்வர்த் குறித்துப் பேசிய தோடர் பழங்குடிகள், "மொத்வர்த் என்பது எங்களின் புத்தாண்டுத் திருவிழா‌. முத்தநாடு மந்தில் உள்ள குலதெய்வக் கோயில்களான 'மூன்போ' மற்றும் 'ஒரியாள்வோ' கோயில்களில் பாரம்பர்ய முறைப்படி வழிபாடு நடத்துவோம். ஆண்டு முழுவதும் நல்ல மழை பெற வேண்டும். காடுகள் செழித்து கால்நடைகளும் செழிக்க வேண்டும். உலக மக்கள் அனைவரும் நோய்நொடியின்றி சிறப்பாக வாழ வேண்டும் என இயற்கையிடம் வேண்டிக் கேட்டுக் கொள்வோம்" என்றனர்.