Published:Updated:

நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் எளிமையான 7 பயிற்சிகள்... சித்தர்கள் அருளிச்செய்த பிராண சக்தி யோகா!

யோகா வகுப்பு
யோகா வகுப்பு

பிரபஞ்சத்தில் உலாவும் பிராண சக்தியைப் பெற்றுக்கொள்ளும் வித்தையைப் பயன்படுத்தித்தான் சித்தர்களும் யோகிகளும் உணவு உறக்கமின்றிப் பல காலம் சுற்றித் திரிந்தனர். அப்படிப்பட்ட சித்த வித்தைகளை எளியவர்களாகிய நாம் கற்க முடியுமா...

பிரபஞ்ச சக்தியாகிய பிராண சக்தியே நாம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று. இதை முழுக்க உணர்ந்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் நமக்கு அருளிச்செய்த இந்த அற்புதக் கலைகளை நாம் இன்று மறந்துவிட்டோம். ஆனால் சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் நம்மிடம் இருந்து கற்றுக்கொண்டு பலனை அனுபவிக்கின்றன.

அனைத்துமாகிய பிரபஞ்ச சக்தியே நம் உடலுக்கு உணவாகவும், உயிருக்கு மூச்சாகவும் விளங்கி உடலுக்குள் கிரகிக்கப்பட்டு சக்தியாகத் திரண்டு நமக்கு எல்லா வித சக்திகளையையும் அளிக்கிறது.

யோகா
யோகா

இந்தப் பிரபஞ்ச சக்தியே புல்லாகவும் பூடாகவும், மரமாகவும், அனைத்து உயிரினங்களாகவும் பஞ்ச பூத சேர்க்கையில் உருமாறி நிற்கிறது. எனவே, உலகில் வாழக்கூடிய அனைத்து ஜீவராசிகளுக்கும் வாழ்வாதாரம் இந்த பிரபஞ்ச சக்தியே. தாவரங்களிலிருந்து கிரகிக்கப்பட்ட பிராண சக்தியையே நாம் கீரையாகவும், கனியாகவும், தானியங்களாகவும் எடுத்துக் கொள்கிறோம். எனினும் அவை நம்முடலில் ஒரு சதவிகிதம்கூட நிறைவதில்லை என்பதே உண்மை.

இப்படிக் கிடைக்கப்பெறும் ஒரு சதவிகிதப் பிரபஞ்ச சக்தியே இவ்வளவு ஆற்றலை நமக்குத் தருகிறது என்றால் வெட்ட வெளியில் பறந்து நிறைந்திருக்கும் பிராணசக்தி நம்முடல் முழுதும் நிறைந்தால் எவ்வித சக்தியை நாம் பெறுவோம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

பிரபஞ்சத்தில் உலாவும் பிராண சக்தியைப் பெற்றுக்கொள்ளும் வித்தையைப் பயன்படுத்தித்தான் சித்தர்களும் யோகிகளும் உணவு உறக்கமின்றிப் பல காலம் சுற்றித் திரிந்தனர். பொதுவாகவே, இது போன்ற சித்த வித்தைகளை எளியவர்களாகிய நாம் கற்க முடியுமா... சித்த வித்தைகளைக் கற்கப் பல காலம் தவம் அவசியமன்றோ... எனப் பலரும் கேள்வி கேட்கலாம். ஆனால், அனைத்து சூத்திரங்களையும் நமக்கு வெகு சுலபமாக கிடைக்கவே இறைசக்தி வழி வகுத்து வைத்துள்ளது என்பதே உண்மை. முடி நரைத்து உடல் இளைத்துக் கடும் தவம் புரிந்தால்தான் சித்தம் கைகூடும் என்று நினைப்பது தவறு. பிராண சக்தி யோகப்பயிற்சியை முறையாகச் செய்து வந்தால் சித்தர்கள் போன்ற ஒளிமிக்க உடலை நம்மால் பெற முடியும் என்கின்றன சித்த நூல்கள்.

யோகா குரு அரி
யோகா குரு அரி

பிராண சக்தி யோகப் பயிற்சியில் கலந்துகொண்டு அதில் சொல்லிக் கொடுக்கப்படும் 7 பயிற்சிகளைச் செய்த இருபது நிமிடத்திலேயே நீங்கள் பெரும் மாற்றத்தை உணரலாம். உங்கள் கைகளில் பிரபஞ்ச சக்தி நிறைந்திருப்பதை கட்டாயம் உங்களால் உணர முடியும்.

இந்த பயிற்சியை ஏன் கற்க வேண்டும்?

நம் எண்ணத்திற்கு அப்பாற்பட்டது இந்த சக்தி. பிரபஞ்ச சக்தி உடலில் நிறைய நிறைய உடல், மனம், இரண்டும் சக்திபெறும், உடல் வளம், வாக்கு சித்தி, எண்ணிய எண்ணம் விரைவில் நிறைவேறல் போன்றவையும் கைகூடும் என்பதில் ஐயமில்லை. யார் இந்த வித்தையைப் பயின்று தேர்ச்சி கொள்கிறாரோ அவர்கள் நீடித்த வாழ்வு, நோயற்ற சிரஞ்சீவி நிலை மட்டுமன்றி மனத்தால் ஒன்றி மோட்ச நிலையையும் அடைவர் என்று யோகசாஸ்திர நூல்கள் கூறுகின்றன. பிராணமய கோசத்தில் உறங்கும் மகா பிராண சக்தியினை விழிப்படைய வைத்து அதன் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தும் ஒருவன், பூரண ஆயுளை எட்டுவான் என்கின்றன சித்த நூல்கள்.

யோகா
யோகா

யோக சாஸ்திரத்தில் பிராண சக்தியே கடவுள் என்பர். இந்த பிராண சக்தி இல்லாமல் நம் வாழ்வு இல்லை. இந்தப் பயிற்சியில் பிராண சக்தி உட்புகுந்து உடலின் நாடிகள் உஷ்ணமடைகின்றன. இது மெதுவாக மூலாதாரத்தில் உறைந்துள்ள மஹா பிராணனான குண்டலினியைத் தூண்டி விழிப்படைய வைக்கிறது. இதனால் மஹா பிராணன் சுழுமுனை நாடி வழியாகச் சுழன்று மூலாதாரத்திற்கு மீண்டு வருகிறது. ஆதார சக்கரங்களும் 72,000 நாடிகளும் சுறுசுறுப்பு அடைகின்றன. இதனால் உடல் முழுக்க பிராண சக்தி தங்கிப் பெருகி ஆத்ம பலம் உண்டாகிறது. நாமும் இந்தத் தந்திரத்தைப் பயன்படுத்தி நோய்நொடி இன்றிப் பல காலம் வாழலாம். சித்தனாய் மாறலாம்!

பயிற்சியில் கவனம் கொள்ளவேண்டியவை:

இந்த பயிற்சிகளைத் தகுந்த குருவின் மூலமே கற்க வேண்டும்.

இரவில் செய்வது கூடாது. மூச்சு சம்பந்தப்பட்டது என்பதால் சிக்கல் வரலாம். சூர்ய பகவானே பிராண சக்தியின் அதிபதி என்பதால் சூரியன் உதிக்கும் இளம்காலை நேரம் உகந்தது.

உடல் நிலைக் கோளாறு கொண்டவர்கள் குருவிடம் கேட்டுக்கொண்ட பிறகே பயிற்சியை செய்ய வேண்டும்.

நல்ல மனநிலையில் இனிய சூழலில் மேற்கொள்ளவேண்டும்.

உணவு எடுத்துக்கொள்ளாமல் செய்வதே நல்லது. மிகுந்த பசியிருப்பின் கொஞ்சமாக கஞ்சி அல்லது பழங்கள் எடுத்துக்கொண்டு செய்யலாம்.

யோகா வகுப்பு
யோகா வகுப்பு

பயிற்சி நடைபெறும் நாள்: 6.9.2020

நேரம்: காலை 7 மணி முதல் 8.30 வரை

நீங்களும் இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு