Published:Updated:

கூடலூர் கூடல் அழகிய பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா - விதை நெல் படைத்து வழிபட்ட விவசாயிகள்!

கூடலூர் கூடல் அழகிய பெருமாள்

முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கு உதவிகரமாக இருந்தவர் கூடலூரைச் சேர்ந்த அண்ணல் பேயத்தேவர். அணை கட்டப் பெரும் பங்களிப்பு செய்த இவர்தான் அதன் கட்டுமானப் பணிகளுக்காக ஆட்களையும் திரட்டி அனுப்பினார். அவரே, கூடல் அழகிய பெருமாள் கோயிலையும் நிர்வகித்து வந்தார்.

கூடலூர் கூடல் அழகிய பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா - விதை நெல் படைத்து வழிபட்ட விவசாயிகள்!

முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கு உதவிகரமாக இருந்தவர் கூடலூரைச் சேர்ந்த அண்ணல் பேயத்தேவர். அணை கட்டப் பெரும் பங்களிப்பு செய்த இவர்தான் அதன் கட்டுமானப் பணிகளுக்காக ஆட்களையும் திரட்டி அனுப்பினார். அவரே, கூடல் அழகிய பெருமாள் கோயிலையும் நிர்வகித்து வந்தார்.

Published:Updated:
கூடலூர் கூடல் அழகிய பெருமாள்
தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள பழைமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூடலழகர் பெருமாள் கோயிலில், சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. இந்த விழாவில் விவசாயிகள் சுவாமிக்கு விதை நெல் மணிகளை காணிக்கையாகப் படைத்து வழிபட்டனர்.

கூடலூர் சிறப்பு

தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்கள் கூடும் ஊராக எல்லையில் அமைந்துள்ளதால், இந்த ஊருக்கு கூடலூர் என்ற பெயர் ஏற்பட்டது. 'திருக்கூடலூர்' என்பது இதன் புராணகால பெயராகும். இங்கு அமைந்துள்ள கூடல் அழகிய பெருமாள் திருக்கோயில் பல நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான மதுரைக் கூடலழகர் கோயிலைப் போன்றே இந்தக் கோயிலின் அமைப்பும் உள்ளது. கருவறை விமானம் அஷ்டாங்க விமான அமைப்பிலேயே உள்ளது. மதுரை மாநகருக்கு கூடல்நகர் என்றொரு பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூடல் அழகர்
கூடல் அழகர்

சேரநாட்டு குறுநில மன்னரான புவனேந்திர ராஜாவால் கட்டப்பட்ட கோயில் இது. பாண்டிய மன்னர்கள் இக்கோயிலுக்குத் திருப்பணிகளை செய்துள்ளனர். இதனை உணர்த்தும்விதமாக கோயில் அர்த்த மண்டபத்தில், பாண்டிய மன்னர்களின் மீன் சின்னமும், சேரநாட்டு குறுநில மன்னரின் ஊதுகுழல் சின்னமும் ஒருங்கே அமைந்துள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சித்திரைத் திருவிழா

இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்ரா பௌர்ணமியை ஒட்டித் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு காப்புகட்டுதலுடன் தொடங்கிய சித்திரைத் திருவிழாவில், முதல் நிகழ்ச்சிகளாக சக்கரத்தாழ்வார் வீதி உலா மற்றும் கோட்டை கருப்பு சாமிக்குப் பொங்கல் வைத்து விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன.

சித்ரா பௌர்ணமி அன்று சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் பால்குடம், தயிர் குடம் எடுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

பக்தர்கள் பால்குடம்
பக்தர்கள் பால்குடம்

விதைப்புக் கூடை

இந்தத் திருவிழாவின் போது கூடல் அழகிய பெருமாளுக்கு 'விதை நெல் மணி'களை ஒரு கூடையில் வைத்துப் படைக்கும் 'விதைப்புக்கூடை' தரும் வைபவமும் நடைபெற்றது. இவ்வாறு சுவாமிக்கு நெல்மணிகளைக் கொடுப்பதால், விவசாயம் செழிப்பாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

முற்காலங்களில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், தங்களது விவசாய நிலத்தில் நெல் பயிரிடும் முன்பாக இக்கோயிலுக்கு வந்து, இந்த விதை நெல் மணிகளை பிரசாதமாகப் பெற்றுச் செல்வர். அவற்றை முதலில் தங்கள் வயலில் விதைத்து விட்டுத்தான், மற்ற விதை நெல்மணிகளைப் பயிரிடுவர். இதனால், கூடல் அழகிய பெருமாள் அருளால் விவசாயம் செழிப்பாக வளரும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. அந்த வழக்கமே தற்போதும் தொடர்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வைபவத்தைத் தொடர்ந்து, சனிக்கிழமை இரவில் கோயிலிலிருந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் கிளம்பிய உற்சவர் சுந்தரராஜ பெருமாள், ஊரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். அனைத்து சமுதாய மக்களின் மண்டகப்படிகளில் எழுந்தருளி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் கோயிலை வந்தடைந்தார்.

விதைப்புக் கூடை
விதைப்புக் கூடை

அண்ணல் பேயத்தேவர்

முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கு உதவிகரமாக இருந்தவர் கூடலூரைச் சேர்ந்த அண்ணல் பேயத்தேவர். நீர் மேலாண்மையை அறிந்திருந்த இவர், அணை கட்டப் பெரும் பங்களிப்பு ஆற்றினார். கட்டடப் பணிகளுக்காக ஆட்களையும் திரட்டி அனுப்பிய அவரே, கூடல் அழகிய பெருமாள் கோயிலையும் நிர்வகித்து வந்தார். அவரது வழிவந்த வாரிசுகள்தான் தற்போது கோயிலை நிர்வகித்து வருகின்றனர். சித்ரா பௌர்ணமி திருவிழாவையும் அவர்களே முன்னின்று நடத்தினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism