Published:Updated:

ஆடிப்பெருக்கு: தளர்வில்லா ஊரடங்கை மீறி மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் கூடிய மக்கள்!

மயிலாடுதுறை
மயிலாடுதுறை

தளர்வில்லா பொதுமுடக்கத்தைமீறி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடிய பக்தர்களின் கூட்டத்தைக் கலைத்து விழாவுக்கு வந்த பக்தர்களை போலீஸார் திருப்பி அனுப்பினர்.

கொரோனா ஊரடங்கால் இன்று பிரதான நதியான காவிரி உட்பட பல நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிலர் நீர்நிலைகளிலும், பலர் வீடுகளிலும் ஆடிப் பதினெட்டு விழாவை உற்சாகமின்றி கொண்டாடி வருகின்றனர்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை

தமிழர்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு விழாவும் ஒன்று. புதுமண தம்பதிகள் திருமணத்தின்போது அணிவித்த மாலைகளை ஆறுகளில் விட்டு தாலிக் கயிறு மாற்றிக்கொள்வதும், திருமணமாகாத பெண்கள் காவிரித் தாயை வணங்கி விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்று வேண்டிக்கொள்வதும், மஞ்சள் கயிறு கட்டிக்கொள்வதும், சுமங்கலிப் பெண்கள் தாலிபாக்கியம் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டு ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறை மாற்றி கட்டிக்கொள்வதும் இந்நாளில் மகிழ்வாக நடைபெறும்.

காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளின் படித்துறைகளில் பழங்கள் மற்றும் மஞ்சள் அரிசி வைத்து படையலிட்டு அதை ஆற்றுத் தண்ணீரில் விட்டு காவிரித் தாயை வணங்குவது தமிழர்கள் தொன்றுதொட்டு செய்து வரும் வழக்கம். ஆனால், இந்தாண்டு கொரோனா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், நீர்நிலைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.

சோழர்கள் ஆட்சிக்காலத்தில் ஆடிப்பெருக்கு விழா எப்படி இருந்தது தெரியுமா?

ஆனால், மயிலாடுதுறையில் பொதுமுடக்கத்தைமீறி காவிரி துலாக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடி காவிரி அம்மனுக்கு வழிபாடு நடத்தி, புனித நீராடி ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினர். மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில், கங்கை முதலான புண்ணிய நதிகள் புனிதநீராடி தங்கள் பாவங்களை போக்கிக்கொண்டதாக ஐதிகம்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை

துலாக்கட்டத்தில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்தாண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு, காவிரியில் நீரோட்டம் இருக்கிறது. இந்தநிலையில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பொதுமுடக்கத்தை மீறி காவிரி துலாக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடி காவிரி அம்மனுக்கு வழிபாடு நடத்தி, புனித நீராடி ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினர்.

பக்தர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை வைத்து, தங்கள் வாழ்வு வளம் பெற காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்தி புனித நீராடினர். தளர்வில்லா பொதுமுடக்கத்தை மீறி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடிய பக்தர்களின் கூட்டத்தைக் கலைத்து விழாவுக்கு வந்த பக்தர்களை போலீஸார் திருப்பி அனுப்பினர். ஆனால், போலீஸார் வருவதற்கு முன்னரே அதிகாலை முதலே பக்தர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை வைத்து, தங்கள் வாழ்வு வளம் பெறவும், விவசாயம் செழிக்கவும் காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்தி புனித நீராடினர். ஆனால், பல கிராமங்களில் வீடுகளில் உள்ள நீர்நிலைகளில் உற்சாகமின்றி கொண்டாடினர்.

அடுத்த கட்டுரைக்கு