Published:Updated:

"வார இறுதி நாள்களிலும் கோயிலைத் திறக்கவேண்டும்!"- சுவாமிமலையில் முருகப் பக்தர்கள் போராட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சுவாமிமலை முருகன் கோயிலில் போராட்டம்
சுவாமிமலை முருகன் கோயிலில் போராட்டம்

வார இறுதி நாள்களிலும் கோயில்களில் பக்தர்கள் வழிபடுவதற்கு உள்ள தடையை நீக்கி கோயில்கள் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை தொடர்ந்து வைத்து வந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக வார இறுதி நாள்களில் கோயில்கள் திறக்கவும், பக்தர்கள் வழிபடவும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் நிலையில், கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை கோயில் முன்பு முருக பக்தர்கள் கோயில்கள் அப்போதும் திறந்திருக்க வேண்டுமென போராட்டம் நடத்தினர். டாஸ்மாக் கடைகள், பொழுதுபோக்கும் கூடங்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அதே போல் கோயில்களையும் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

சுவாமிமலை முருகன் கோயிலில் போராட்டம்
சுவாமிமலை முருகன் கோயிலில் போராட்டம்

கொரோனா பரவலைத் தடுப்பதற்காகத் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் தமிழக அரசால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்களும் கோயில்களில் பக்தர்கள் வழிப்பாட்டுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. டாஸ்மாக் கடைகள், திரையரங்கம், பொழுதுபோக்குப் பூங்காக்கள் ஆகியவைத் திறக்கப்பட்டுள்ளன.

திருச்சி ஹேங்கவுட்: 9 குன்றுகள், குகைகள், கல்வெட்டுகள், அழகிய சிற்பங்கள்... நார்த்தாமலை அற்புதங்கள்!

அதேபோல் வார இறுதி நாள்களிலும் கோயில்களில் பக்தர்கள் வழிபடுவதற்கு உள்ள தடையை நீக்கிக் கோயில்கள் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினைத் தொடர்ந்து இவ்வூர் மக்கள் வைத்து வந்தனர். இதனை வலியுறுத்தி முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முருகப் பக்தர்கள் குழுவைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் சத்தியநாராயணன் அறிவித்திருந்தார்.

கோயில்கள் திறக்க வலியுறுத்தி போராட்டம்
கோயில்கள் திறக்க வலியுறுத்தி போராட்டம்

அதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது வார இறுதி நாள்களிலும் கோயில்களைத் திறந்து பக்தர்கள் வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோஷமிட்டனர்.

"கோயில்களில் வழிபாடு தடையில் இருப்பதால் அதனைச் சார்ந்து பிழைக்கக் கூடிய பூ, பூஜை பொருள்கள் விற்பனை செய்வோர், ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் வருமானம் இழந்து பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால், தியேட்டர்கள், பூங்காக்கள், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. அங்கு கொரோனா விதிமுறை என்பதே கடைபிடிக்கப்படுவதில்லை. எனவே, கொரோனா பரவலைக் காரணம் காட்டி வார இறுதி நாள்களில் கோயிலை மூடாமல் அதைத் திறப்பதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். பக்தர்கள் வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டும்" எனப் போராட்டம் நடத்தியவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு